எருமை பால் vs மாட்டு பால் : குழந்தைகளுக்கு கொடுக்க இரண்டில் எது சிறந்தது?

Milk Benefits : குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க எருமை பால் சிறந்ததா? பசு பால் சிறந்ததா என்ற கேள்வி பொதுவாக இருக்கும் நிலையில், இவ்விரண்டு பாலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.

Milk Benefits For Kids : எருமை பால் சிறந்ததா? இல்லை மாட்டு பால் சிறந்ததா? என்ற கேள்வி இருக்கிறது.  அதுகூட பரவாயில்லை, எருமை பால் குடித்தால் எருமை போல் உருவமும் புத்தியும் வந்துவிடும் என்ற வேடிக்கையான எண்ணமும் பரவலாக இருக்கிறது. 

 

1 /7

அதனால் அது உண்மையா?, குழந்தைகளுக்கு எருமை பால் கொடுக்கலாமா? மாட்டு பால் கொடுக்கலாமா? என்பதை தெரிந்து கொள்வோம். 

2 /7

தினமும் காலை பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. அதுவும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கும். ஆனால் இதில் ஒரு விநோதமான சந்தேகம் பொதுவாக மக்களிடத்தில் இருக்கிறது. 

3 /7

இது குறித்து ஆயுர்வேத டாக்டர் அமித் கூறுகையில், எருமைப்பால் பற்றி பரவிய இந்த வதந்தி முற்றிலும் தவறானது. எருமைப்பால் குழந்தைகளுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக பசும்பாலைப் போலவே நன்மை பயக்கும் என்கிறார் டாக்டர் அமித். 

4 /7

பசும்பாலை விட எருமைப்பாலில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால், அது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். இருப்பினும், இது குழந்தையின் செரிமான திறனைப் பொறுத்தது. சில குழந்தைகள் எருமைப் பாலை எளிதில் ஜீரணிக்கிறார்கள், சிலருக்கு செரிமான பிரச்சனை ஏற்படலாம்.

5 /7

எருமைப்பால் மனவளர்ச்சி குன்ற செய்யும் அல்லது அறிவு வளர்ச்சியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் டாக்டர் அமித் தெளிவுபடுத்தினார். சமச்சீர் உணவு, சரியான கல்வி மற்றும் ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றின் பங்களிப்பு குழந்தைகளின் மன வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. 

6 /7

ஒரு குழந்தைக்கு எருமைப் பாலை ஜீரணிப்பதில் சிரமம் இருந்தால், அவர்களுக்கு பசு பால் கொடுக்கலாம். எருமைப்பால் குடிப்பதால் குழந்தைகளின் மூளை கெட்டியாகும் என்பது எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார் டாக்டர் அமித். 

7 /7

இது முற்றிலும் தவறான தகவல். பசும்பாலை விட எருமைப்பாலில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிக புரதம், அதிக தாதுக்கள் உள்ளன. எருமை பால் குடிப்பதில் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது என்றால் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.