மின்சார கட்டணம் அதிகம் வருகிறதா? குறைக்க எளிய வழிகள் இதோ!

பொதுவாக கோடை காலத்தில் EB பில் அதிகம் வரும். தற்போது வீட்டில் பல சாதனங்கள் இருப்பதால் பில் அதிகமாக வருகிறது. இதனை எப்படி கம்மி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /6

LED பல்புகள் பழைய கால பல்புகளை விட குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. எனவே இவற்றை வீடுகளில் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். மேலும் அவை நீண்ட நேரம் பிரகாசமாக இருக்கும்.   

2 /6

வீட்டில் உள்ள சில எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் கேஜெட்டுகள் பயன்படுத்தப்படாவிட்டாலும் மின்சாரத்தைப் எடுத்துக்கொள்கின்றன. எனவே பயன்படுத்தாத பொருட்களை பிளாக்கில் இருந்து கழட்டி வைப்பது நல்லது.  

3 /6

அதிகளவு மின்சாரத்தை இழுக்கும் குறைந்த திறன் கொண்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். அதற்கு பதில் சிறிது விலை அதிகமாக இருந்தாலும், அதிக திறன் கொண்ட வீட்டு உபயோக எலெக்ட்ரிக் சாதனங்களை வாங்குவது நல்லது.   

4 /6

ஈரமான துணிகளை அல்லது முடியை காய வைக்க உலர்த்தியை பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக உங்கள் காற்றில் காய விடுவது நல்லது. இதன் மூலம் கூடுதல் மின்சாரம் இயக்கப்படுவதை தடுக்கலாம்.  

5 /6

அதிக மின்சார உபயோகத்தை தவிர்க்க வீட்டில் சோலார் பேனல்களை வைப்பது பற்றி யோசித்து பாருங்கள். முதலில் இதற்கு நிறைய பணம் செலவாகும் என்றாலும் நீண்ட காலத்திற்கு இது உங்கள் மின் கட்டணத்தில் நிறைய சேமிக்க உதவும்.  

6 /6

மின்சாரத்தை சேமிக்க உங்கள் குடும்பத்திற்கும் சொல்லி கொடுங்கள். ஆட்கள் இல்லாத சமயத்தில் தேவையில்லாமல் ஓடும் பேன் மற்றும் லைட் போன்றவற்றை அணைத்தாலே பாதி செலவை கம்மி செய்யலாம்.