புதுடெல்லி: முதுமை காலத்தில் ஓய்வூதியம் என்பது உண்மையில் வரப்பிரசாதம் தான். ஓய்வு பெறும் போது கோடீஸ்வரராக ஓய்வு பெர விரும்பினால், ஆரம்பத்திலிருந்தே அதற்குத் தயாராகுங்கள். ஓய்வூதியத்திற்காக பணத்தை சேமிப்பது வேலையில் சேர்ந்த  நாளிலிருந்து தொடங்கப்பட வேண்டும். அதாவது, நீங்கள் எவ்வளவு விரைவில் முதலீட்டை ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவு அதிக லாபத்தை நீங்கள் ஓய்வு பெறும் காலத்தில் பெறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NPS ஓய்வூதியத் திட்டம்


ஓய்வூதிய திட்டங்களில், NPS பாதுகாப்பானது மட்டுமல்லாமல், நல்ல வருமானத்தை அளிக்கும் ஒரு திட்டமாகும். புதிய ஓய்வூதிய திட்டத்தில், அதாவது NPS திட்டத்தில், பிரதி மாதம் ரூ .50,000 ஓய்வூதியத்தை  பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.


ALSO READ | Pension: இந்தியாவில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? வரலாறு


50,000 ரூபாய் ஓய்வூதியம்


NPS திட்டத்தில் சேரும் போது, உங்கள் வயது 30 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம். அதில்  நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், ஓய்வு பெறும் வரை அதாவது 30 ஆண்டுகள் முதலீட்டிற்கு பிறகு உங்களுக்கு 60 வயதாகும்போது உங்கள் கையில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் 52 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வரும். அதாவது, உங்கள் முதுமை காலத்தில், பென்ஷன் பற்றிய கவலை ஏதும் இல்லாமல்,  யாரையும் சார்ந்து இருக்காமல், தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழலாம்.


ALSO READ | அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!


 


NPS  திட்டத்தில் முதலீடு 


உங்கள் வயது -  30 
ஓய்வு பெறும் வயது -  60
NPS  திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் முதலீடு - ரூ.10,000 
மதிப்பிடப்பட்ட வருமானம் 9%
முதலீட்டு காலம் (Annuity period ) 20 ஆண்டுகள்
Annuity திட்டத்தில் முதலீடு - 40 சதவீதம் 
Annuity முதலீட்டில்  வருவாய்- 6% 


கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம்


NPS அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படும் திட்டமாகும். அதாவது, நீங்கள் 9 முதல் 12 சதவிகிதம் வருடாந்திர வருமானத்தைப் பெறுவீர்கள். முதிர்ச்சியடைந்தவுடன், நீங்கள் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக 40 சதவீதத்தை வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், வருடாந்திர வருவாயும்  சுமார் 6 சதவிகிதம் கிடைக்கும். இப்போது NPS கால்குலேட்டரின் உதவியுடன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். NPS கால்குலேட்டரின் படி, ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகை: 


உங்கள் நிகர முதலீட்டு மதிப்பு ரூ 1.84 கோடி
மொத்த தொகை ரூ 1.10 கோடி
ஓய்வூதியம் மாதம் ரூ .52,857


ALSO READ | Ration Card விதிகளில் முக்கிய மாற்றம்; இனி உங்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR