Pension: இந்தியாவில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? வரலாறு

இந்தியாவில் ஓய்வூதியம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்தது? பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ற திட்டத்தை யார் அறிமுகப்படுத்தியது யார்?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 1, 2021, 10:20 PM IST
  • இந்தியாவில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது யார்?
  • எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
  • ஓய்வூதியத்தின் முதல் பெயர் அடித்தூண்
Pension: இந்தியாவில் ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? வரலாறு title=

ஓய்வூதியம் என்பது பணிஓய்வு பெற்ற முதியவர்களுக்கு வரப்பிரச்சாதம் என்று சொன்னால் மிகையாகாது. வாழ்க்கையில் கஷ்டப்பாடமல் வாழவேண்டும் என்றால் அரசுவேலை என்ற கண்ணோட்டத்தைக் கொண்டு வந்தது ஓய்வூதியம் தான்.

அரைக் காசு உத்தியோகம் என்றாலும் அது அரசு உத்தியோகமாக இருக்க வேண்டும் என்பது சாமானிய மக்களின் தாரக மந்திரமாக இருந்தது. திருமணத்திற்கு துணை தேடும்போது, அரசாங்க ஊழியர்களுக்கு கிராக்கி அதிகம் என்று சொல்வதும், வயதான காலத்தில் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதன் அடிப்படையில் தான் என்பது நிதர்சனம்.

 ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் கணிசமான தொகையை ஓய்வூதியமாக பெறுகின்றனர். தற்போதைய தொற்றுநோய் காலத்தில் சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்களில் பலர் பொருளாதார சிக்கல்களால் தடுமாறினாலும், ஓய்வூதியதாரர்கள் அதிக சிரமங்கள் இல்லாமல் வாழ முடிவதற்கும் காரணம் ஓய்வூதியம் தான். 

ALSO READ | வங்கி ஊழியர்களுக்கு Good News; இனி அதிக ஓய்வூதிய பலன்கள், அதிக குடும்ப ஓய்வூதியம்

சரி, இந்தியாவில் ஓய்வூதியம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்தது? பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ற திட்டத்தை யார் அறிமுகப்படுத்தியது யார்?

1860 முதல் 18rr80 வரை, திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தவர் ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜா (Ayilyam Tirunal Ramavarma Maharaja). அவருடைய சேவகர்களில் ஒருவரான கோச்சப்பன் பிள்ளை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரின் வாழ்வாதரமே அரசாங்கத்திலிருந்து பெற்று வந்த சம்பளம் தான். அவர் ஓய்வு பெற்றவுடன், உணவுக்கே வழியில்லாமல் போனது.

உண்ண உணவில்லாத நிலையில் வறுமையில் வாடினார் கோச்சப்பன் பிள்ளை. அவருடைய குழந்தைகளின் ஆரோக்கியமும் சீர்கெட்டது. அவரின் நான்கு குழந்தைகள் ஒருவருக்குபின் ஒருவராக இறந்தனர்.

READ ALSO | இவர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது: மத்திய அரசின் மிகப்பெரிய முடிவு

இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவ, ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜாவின் காதுகளையும் எட்டியது. மகாராஜாவுக்கு குழந்தைகள் இல்லை என்பதால், கோச்சப்பன் பிள்ளையின் குழந்தைகளின் மரணம் அவருக்கு மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தியது.

உடனடியாக கருவூலத்தில் இருந்து ஒரு தொகையை கோச்சப்பன் பிள்ளைக்கு கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மகாராஜா, அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் எந்த ஒரு நபரும் இது போன்ற நிலையை எதிர்கொள்ளக் கூடாது என்றும் அறிவித்தார்.

அரசு ஊழியர்களின் வாழ்க்கை குறித்து ஆழ்ந்து ஆலோசித்த மகராஜா, அவர் தனது ஆலோசகர்கள்/மூத்த அதிகாரிகள் அனைவரிடம் கலந்தாலோசனைகளை மேற்கொண்டார். பிறகு, 1864ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாளன்று, ஓய்வூதிய சட்டத்தை கொண்டு வந்தார் ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜா.

அடித்தூண் கட்டளைச் சட்டம் என்பது அந்த சட்டத்தின் பெயர் ஆகும். ஓய்வூதியம் என்பதற்கு, மலையாளத்தில் விஷ்ரமவேதனம் அல்லது அடித்தூண் (vishramavethanam or adithoon) என்று பெயர். 

ALSO READ | ஓய்வூதியம் குறித்த சூப்பர் செய்தி: NPS மூலம் கிடைக்கும் உறுதி செய்யப்பட்ட வருவாய்

ஓய்வூதியச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் வடிவமே மாறியிருந்தாலும், ஓய்வூதியத்திற்கு அடித்தளம் இட்டவர் ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜா என்கிறது சரித்திரம்.

உண்மையில், ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜாவின் ஆட்சிக்காலம் திருவிதாங்கூரில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தனது, திவான் த. மாதவ ராவின் உதவியுடன், மகாராஜா, திருவிதாங்கூரில் பல சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் செயல்படுத்தினார். 

ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜா பதவியேற்ற சமயத்தில், திருவிதாங்கூர் அரசுக்கு கடன்சுமை அதிகமாக இருந்தது. எனவே, பல ஆடம்பர செலவுகள் உட்பட பல செலவுகளை குறைத்தார் மகாராஜா. 1863 ஆம் ஆண்டில், திருவிதாங்கூருக்கு பொதுக் கடன் இல்லை என்று அறிவித்தார்.

ஆயில்யம் திருநாள் ராமவர்ம மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில், கல்வி, சட்டம், பொதுப்பணி, மருத்துவம், தடுப்பூசி மற்றும் பொது சுகாதாரம், வேளாண்மை போன்றவற்றில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. 

ALSO READ | 7th Pay Commission மிகப்பெரிய முடிவு: இவர்களின் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News