புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொலைவை கடைபிடிக்க வேண்டிய அவசியம் அதிகரித்திருக்கிரது. இந்த சூழலில் வெளியில் இருந்து உணவு வாங்குபவர்கள் நேரடியாக ஹோட்டல்களுக்கும், ரெஸ்டாரண்டுகளுக்கும் சென்று சாப்பிடுவதை தவிர்த்து Takeaway Service சேவைகளை நாடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை கருத்தில் கொண்டு, Zomato புதன்கிழமையன்று தனது Takeaway Service சேவைகளை கமிஷனே இல்லாமல் செய்யப் போவதாக கூறுகிறது. அதாவது பூஜ்ஜியம் கமிஷனில் உணவகங்களிடம் இருந்து உணவைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் முடிவை Zomato எடுத்துள்ளது. அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு தன்னுடைய தொழில் கூட்டாளராக இருக்கும் உணவகங்களுக்கு கமிஷன் இல்லாமல் Takeaway Service சேவைகளை இலவசமாகவே கொடுக்கப்போவதாக   உணவு விநியோக தளம் Zomato கூறியது.


"நாங்கள் எந்தவொரு கமிஷனையும் வசூலிக்க மாட்டோம், மேலும் அனைத்து டேக்அவே ஆர்டர்களிலும் payment gateway கட்டணங்களையும் பெற்றுக் கொள்ள மாட்டோம்" என்று Zomato வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.


"எங்கள் Zomato app-ஐ பயன்படுத்தி உணவு வாங்கும் போக்கு கடந்த சில மாதங்களில் 200 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதால், எங்கள் செயலி (Zomato app) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது" என்று ஜொமோடோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


"55,000 க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் தொடர்பில் இருக்கும் Zomato வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான ஆர்டர்களை டெலிவரி செய்கிறது" என Zomato தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் (Zomato CEO Deepinder Goyal) கூறுகிறார். 


"உணவகத் துறைக்கு உதவ, இதுபோன்ற அனைத்து ஆர்டர்களுக்கும் செலுத்தும் payment gateway கட்டணங்களையும் நாங்கள் ரத்து செய்கிறோம்" என்று தீபீந்தர் கோயல் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.


கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த உணவு விநியோக வணிகத்துடன் ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்புக்கு பிறகு 110 சதவீதம் அதிகரிப்பு இருப்பதாக இருப்பதாக Zomato கூறுகிறது.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR