நடிகர் அல்லு அர்ஜுன் மீது திடீர் வழக்கு- மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!
நடிகர் அல்லு அர்ஜுன்மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களால் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆனால் நடிகர் அல்லு அர்ஜுனின் கதையோ இதில் சற்று வித்யாசமாக உள்ளது.
அவர் நடித்த விளம்பரங்கள் அண்மைக் காலமாகவே சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகிவருகிறது. அந்த வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் அல்லு அர்ஜுன். அதாவது சமீபத்தில் வெளியான கல்வி நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் அவர் நடித்திருந்தார்.
மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!
இந்நிலையில் அவ்விளம்பரத்தில் தரவரிசை பற்றி தவறான புள்ளி விபரங்களை அவர் தெரிவித்ததாகவும் அந்த விளம்பரம் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறி சமூக ஆர்வலர் ஒருவர் அல்லு அர்ஜுன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் மீதும் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ள அவர், இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் விளம்பரங்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் பான் இந்தியா ரிலீஸாக வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. இதையடுத்து இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் இதன் அடுத்த பாகத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் தயாராகிவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR