சென்னை: 2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் படமான "நேர்கொண்ட பார்வை" படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அஜித்தின் அடுத்தப் படமான "வலிமை" படத்தின் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அது உண்மையா? இல்லையா? என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் அஜித் பற்றி எந்தவொரு அப்டேட் வெளியானாலும், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவது வழக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"வலிமை" படத்தை நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்த வகையில், தற்போது அஜித்தின் "தல 60" படமான வலிமை பற்றி சில தகவல்கள் கூறப்படுகிறது. 


> இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
> இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
> வலிமை படத்தில் இரட்டை வேடங்களில் அஜித்குமார் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
> இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் சூர்யா அல்லது ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது.


இதில் எது உண்மையான தகவல் என்பதை படக்குழு அறிவிக்காத வரை, எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. ஆனால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். வலிமை படத்தை பற்றி ஏதாவது அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்று...?


தல அஜித் நடிப்பில் வெளியான "நேர்கொண்ட பார்வை" படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்தது. அதேபோல விசுவாசம் படமும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.