Actor Ajith Viral Video: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதற்கு பிறகு அஜித் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகவே இல்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் The Good Bad Ugly உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித் நடித்து வருகிறார். இந்தாண்டு அவரது படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றும் அடுத்தாண்டுதான் இந்த இரு படங்களும் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்படம் ஒருபுறம் இருக்க அஜித் பயணம் மேற்கொள்வதிலும், கார் ரேஸ் - பைக் ரேஸ் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் காட்டும் நபர் ஆவார். வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக திரைப்படங்களில் நடிக்கும் அவர், தனது மனதிற்கு பிடித்ததை செய்யும் பொருட்டு இதுபோன்ற விஷயங்களிலும் அதிக ஈடுபாடுடன் இருக்கிறார். வாழ்க்கையை அதன் போக்கில் கொண்டாடும் நபராக அஜித் தோற்றமளிக்கிறார் எனலாம். அந்த வகையில், அவர் தனது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பயணங்கள் குறித்து அவர் பேசிய ஒரு காணொலி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பயணம் மேற்கொள்வதன் மேல் அவருக்கு இருக்கும் காதல் உள்ளிட்ட விஷயங்களை அவர் பேசியிருந்தார். 


நடிகர் அஜித் பேசியது என்ன?


அந்த வீடியோவில் அஜித்,"தனிப்பட்ட முறையில் பயணம் என்பது கல்வியின் சிறந்த வடிவமாக நான் கருதுகிறேன். மக்களைப் பயணிக்க வைப்பதே என் யோசனை. மதம், ஜாதி போன்றவை நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட உங்களை வெறுக்க வைக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது, இது மிகவும் உண்மை" என பேசியிருந்தார். அதாவது, நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது இந்த வெறுப்பு கரைந்துவிடும் என்றும் ஒரு மனிதரை முன்முடிவு இன்றி அணுகும் தன்மையை பயணங்கள் கற்றுக்கொடுக்கும் என அஜித் விளக்கமாக பேசியிருந்தார். மக்கள் ஏன் பயணிக்க வேண்டும் என்றும் பயணம் ஒரு மனிதனை எப்படி உருமாற்றும் என்றும் அந்த வீடியோவில் பேசியிருந்தார். 



மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?


மேலும் அவர் அந்த வீடியோவில்,"நாம் ஒருவரை சந்திப்பதற்கு முன்பே அவர்கள் குறித்து முன்முடிவுக்கு வந்துவிடுவோம். ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது, ​​வெவ்வேறு தேசங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை சந்திக்கலாம். மேலும் அவர்களின் கலாச்சாரத்தை அனுபவிப்பது உங்களை மக்களுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் அதிக இணக்கம் காட்டத் தொடங்குவீர்கள். அது உங்களை ஒரு சிறந்த நபராக மாறச்செய்யும்" என்றார். 


அஜித்துக்கு குவியும் பாராட்டு


வட இந்தியாவில் எங்கோ எடுக்கப்பட்ட இந்த வீடியோ எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. இந்த வீடியோ நடிகர் அஜித்தின் உதவியாளரான சுரேஷ் சந்திராவின் வாட்ஸ்அப் சேனலில் பதிவிடப்பட்டிருந்ததாகவும், அதன்மூலம் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. சுரேஷ் சந்திரா அதனை பின்னர் தனது X பக்கத்திலும் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப், X, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதனை தங்களின் பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர். நடிகர் அஜித்தின் இந்த வீடியோ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 


ரசிகர் மன்றங்களை கலைப்பது, தன்னை தல என அழைக்க வேண்டாம் என பொதுவெளியில் அறிவிப்பது என இவற்றை செய்தும் கூட அஜித் மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் பித்துபிடித்து அலைகின்றனர் எனலாம். அந்த வகையில், அவர்களுக்கு நிச்சயம் நடிகர் அஜித்தின் இந்த பேச்சு பயணம் ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும் எனலாம். 


மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தின் பூஜை புகைப்படங்கள்! விஜய் அசத்தலா இருக்காறே!!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ