Flight Crash: கடலில் விமானம் விழுந்து விபத்து! பிரபல நடிகர் குடும்பத்துடன் பலி
Actor Died In A Plane Crash: புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் விமான விபத்துக்கு பலியான நடிகர்.... இரு மகள்களும் விமானியும் பலி
Christian Oliver & New Year Celbration Tragedy: கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது இரண்டு மகள்களுடன் கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்றிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து தொடர்பான தகவல்களை செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
விமானம் செயின்ட் லூசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தை சந்தித்தது என்ற தகவல் உறுதியானது. முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் விபத்து பற்றி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்த பிறகே இந்த விபத்து சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | சொதப்பிய பைக் ஸ்டண்ட், பறந்து விழுந்த இளைஞர்: திகிலூட்டும் வைரல் வீடியோ
51 வயதான நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் உடன் அவரது இரு மகள்களான மடிதா க்ளெப்சர் (10) மற்றும் அன்னிக் கிளெப்சர் (12) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து பிரபல நடிகர் கடலில் விமான விபத்தில் மரணம்; சிறுமிகள் இருவரும் மரணம்! விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது
வெளியான அதிர்ச்சி வீடியோ
விபத்து நடந்தபோது, விமானம் வானத்தில் இருந்து கடலில் விழுந்ததை கரீபியன் தீவுகளில் சிலர் கேமராவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விபத்துக்குப் பிறகு உதவிக்கு வந்த குழுவினர் கிறிஸ்டியன் ஆலிவரின் உடலை கடலில் இருந்து வெளியே எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தில் உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது மகள்கள் மற்றும் விமானிக்கு பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இச்சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் பலர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்டியன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் புகைப்படமும் வைரலாகிறது.
மேலும் படிக்க | நடிகை ரீமா சென்னிற்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!
புத்தாண்டு கொண்டாட பெட்டிட் நெவிஸ் தீவுக்கு சென்ற அவர் புத்தாண்டு தினத்தன்று கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, “அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கட்டும்” என்று வாழ்த்தியது தான் அவருடைய கடைசி வாழ்த்தாக மாறிவிட்டது.
நடந்தது என்ன?
விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் பிறகு விமானம் நேரடியாக கடலில் விழுந்து நொறுங்கியது.
51 வயதான கிறிஸ்டியன் ஜெர்மனியை சேர்ந்தவர். கிறிஸ்டியன் உண்மையான பெயர் கிறிஸ்டியன் க்ளெப்சர். இந்த விபத்தில் கிறிஸ்டியனின் 10 வயது மகள் மதிதா மற்றும் 12 வயது மகள் அனிக் ஆகியோரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் உரிமையாளர் மற்றும் விமானி பூர்வீக அமெரிக்கராஅ ராபர்ட்டும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர், 2006 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போர் பற்றிய திரைப்படமான தி குட் ஜெர்மன், 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்பீட் ரேசர், இந்தியானா ஜோன்ஸ், டயல் ஆஃப் டெஸ்டினி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ