நடிகை ரீமா சென்னிற்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் புகைப்படம்!

Actress Reema Sen: சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர், ரீமா சென். இவர், தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தமிழ் ரசிகர்களுக்கு ரீமா சென்னை நன்றாகவே தெரியும். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மும்மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர், திருமணம் ஆனவுடன் திரையுலகில் இருந்து விலகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். ரீமா சென், சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் இருந்த அவரது மகனை பார்த்த ரசிகர்கள், ‘நம்ம ரீமா சென் மகனா இது’ என வாய்பிளந்துள்ளனர். அந்த வைரல் போட்டோவை இங்கு பார்க்கலாம் வாங்க. 

1 /7

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர், ரீமா சென். கொல்கத்தாவில் பிறந்து பள்ளிப்படிப்பை முடித்த இவர், பின்பு மும்பையில் குடியேறினார். ரீமா சென் நடிப்பில் பல தமிழ் படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

2 /7

ரீமா சென், தமிழில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் இவர், அனிதா பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் பலரிடம் இருந்து பாராட்டினை பெற்றார். அதையடுத்து, விக்ரமுடன் ராஜ பாட்டை படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். 

3 /7

ரீமா சென், கடைசியாக தமிழில் 2012ஆம் ஆண்டு ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த கையோடு ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திரையுலகை விட்டு விலகிய இவர், மீண்டும் நடிக்க வரவே இல்லை. 

4 /7

ரீமா சென் நடிப்பில் வெளியான மின்னலே, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக வல்லவன் படத்தில் சைக்கோ போல நடித்த இவரை ரசிகர்கள் இன்றளவும் திரையில் பார்க்கும் போது ரசித்து வருகின்றனர். 

5 /7

ரீமா சென், 2012ஆம் ஆண்டு திருமணம் ஆன பிறகு பல அழைப்புகள் வந்தும் எந்த படத்திலும் நடிப்பதை தவிர்த்தார். இவருக்கு 2013ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர், ருத்ரவீர். 

6 /7

ரீமா சென், சினிமாவில் ஆக்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ளார். இவர், அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

7 /7

ரீமா சென்னின் மகன் ருத்ரவீருக்கு தற்போது 10 வயதாகிறது. ரீமா சென், பல 90s மற்றும் 2k கிட்ஸிற்கு பிடித்தவர். ‘நாம் சிறுவயதில் பார்த்து வளர்ந்த கதாநாயகிக்கு இவ்வளவு பெரிய மகனா என அந்த ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர்.