நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க நல்ல கலெக்சனை ஈட்டிவருகிறது. சினிமா வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே விக்ரம் திரைப்படம்தான் ஹாட் டாபிக்காக இருந்துவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் செய்துள்ள சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது,கமலின் ரசிகர்கள் சிலர், அவருக்குக் கோவில் கட்ட முடிவுசெய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


இது ஏதோ விக்ரம் படத்தையொட்டி உருவான ஏற்பாடு அல்ல; கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதாம். தற்போது விக்ரம் திரைப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளதால் இந்த விபரம் தற்போது கவனத்துக்கு வந்துள்ளது.


எல்லாம் சரி, இந்தக் கோவில் தமிழகத்தில் எந்த ஊரில் கட்டப்பட்டுவருகிறது எனக் கேட்கிறீர்களா? அங்கேதான் ட்விஸ்ட்டே.  அதாவது, கமலுக்குக் கோவில் கட்டப்பட்டுவருவது நம்ம ஊரில் கிடையாதாம்.



கொல்கத்தாவில்தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறதாம். கமல்ஹாசனைக் கொண்டாடும் விதமாக உருவாகிவரும் இந்தக் கோவில் கொல்கத்தாவில் உள்ள கிதிர்பூர் எனும் ஊரில் கட்டப்பட்டுவருகிறது. வருகிற துர்கா பூஜையன்று இந்தக் கோவில் திறக்கப்படவுள்ளதாகவும் திறப்பு விழாவுக்கு நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அடுத்தடுத்து பிரச்சினைகள்.. விஜய் 66 ஷூட்டிங் திடீர் நிறுத்தம்! - நடந்தது என்ன?


 


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள கமல்ஹாசன், அவள் ஒரு தொடர்கதையை ரீமேக் செய்து கபிதா எனும் பெங்காலி படத்திலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் 2 கே கிட்ஸ்கள் பலர் நடிகர் கமல்ஹாசனை ஆண்டவர் என அழைத்துவரும் நிலையில், தற்போது அவருக்கு கோவிலே கட்ட ரசிகர்கள் முன்வந்துள்ளது வைரல் ஆகிவருகிறது.


மேலும் படிக்க | ரஜினிக்காக சிவகார்த்திகேயன் செய்யப்போகும் சம்பவம்..! - இந்த தடவையும் ஹிட்தானாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR