உலகநாயகன் கமல் ஹாசன் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் கமல் ஹாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அவர், “இங்கே வந்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் வணக்கம். என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மய்ய தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கைதான் கொளரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன்.



பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக்கொடுக்கிறேன் அவ்வளவுதான்.



அமெரிக்கா முதல் சின்ன குக்கிராமங்கள்வரை பல இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். கழிவறையும் முக்கியம்தான் மருத்துவமனையும் முக்கியம்தான். 40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணி, அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன். பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தோழர்கள் நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள்” என்றார்.


மேலும் படிக்க | கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் - கமலுக்கு முதல்வர் வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ