கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் - கமலுக்கு முதல்வர் வாழ்த்து

நடிகர் கமல் ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 7, 2022, 01:02 PM IST
  • கமல் ஹாசனுக்கு இன்று பிறந்தநாள்
  • பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
  • முதலமைச்சரும் தெரிவித்துள்ளார்
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் - கமலுக்கு முதல்வர் வாழ்த்து title=

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒருவர் கமல் ஹாசன். நடை பழகிய வயதிலேயே சினிமாவில் தோன்றிய அவர் உதவி நடன அமைப்பாளராக, உதவி இயக்குநராக என பல வழிகளில் பயணித்தவர். ஆனால் அவரது திறமையை உணர்ந்துகொண்ட கே.பாலசந்தர் கமல் ஹாசனை நடிப்பு வழியில் செல்ல அறிவுறுத்தினார். அதன்படி சென்ற கமல் ஹாசனை விஞ்சுவதற்கு நடிப்பில் ஆளில்லை. கலைத்தாயின் பெரிய மகன் சிவாஜி கணேசன் என்றால் இளைய மகன் கமல் ஹாசன் என பலர் கூறுவதுண்டு.

நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கமல் தனி முத்திரையை பதித்தவர். எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக சிந்திப்பது மட்டுமின்றி அதை சரியாக ரசிகர்களுக்கு பரிமாறுவது என கமல் மிகப்பெரும் கலைஞன். கமலின் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கலை ஓடுகிறது. அதனால்தான் இன்றளவும் கமல் மீது பலருக்கு வெறுப்பு இருந்தாலும் அவரை ரகசியமாக ரசிக்கவும் செய்கிறார்கள் அவர்கள். அந்தவகையில் கமல் எப்போதும் ஒரு அதிசயமே.

சினிமா மட்டுமின்றி கவிதை எழுதுவது, பாடுவது, பாடல் எழுதுவது என கமல் இறங்காத கிரவுண்ட் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பன்முகத்திறமை = கமல் ஹாசன். 

Kamal

கலை பாதையில் பயணித்துக்கொண்டிருந்த கமல் திடீரென அரசியல் பாதையிலும் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அந்தப் பாதையில் அவரால் நினைத்த அளவு சோபிக்க முடியவில்லை என்றே கூறலாம். இருந்தாலும் அந்தப் பாதையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார். 

இந்தச் சூழலில் கமல் ஹாசன் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தைத் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனுக்குஎன் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | விஜய் vs அஜித் ரசிகர்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தப்போகும் அனிரூத்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News