கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் கார்த்தி, இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார். இவரது சம்பள விவரங்கள் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் (Actor Karthi Net Worth and Salary) கசிந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கார்த்தி..


சினிமா உலகை பின்புலமாக கொண்டு திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்த பல நடிகர்கள், கோலிவுட்டில் இருக்கின்றனர். அவர்களுள் ஒருவர், கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் இவர். தந்தை ஒரு பக்கம் நடிப்பில் இருந்து விலக, தனது அண்ணன் முன்னணி ஹீரோவாக வளர்ந்து காெண்டிருக்க, 2007ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. அதற்கு முன்னர், மணிரத்னம் இயக்கியிருந்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். பருத்தி வீரன் படத்தில் ‘வீரா’ எனும் கதாப்பாத்திரத்தில், கிராமத்து காட்டானாக தோன்றிய இவரை பலருக்கும் பிடித்துப்போனது. இதையடுத்து சில ஹிட் படங்களில் நடித்த கார்த்தி, அதன் பிறகு கொஞ்சம் சொதப்பலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால், இவரது மார்கெட் கொஞ்சம் வீழ்ச்சியை சந்தித்தது. 


கார்த்தியின் வெற்றிபெற்ற/தாேல்வியுற்ற படங்கள்:


நடிகர் கார்த்தி, இளைஞராக நடித்திருந்த பல படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் அவர் கொடுத்த வெற்றி படங்களை விட தோல்வி படங்களே அதிகம். நல்ல கதையம்சம் நிறைந்த படமாக இருந்தாலும், அது ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை சம்பாதிக்காமல் சென்றது. இந்த நிலையில், அவருக்கு கம்-பேக்காக அமைந்த படம்தான் கைதி. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த கார்த்தி, மீண்டும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவர் வந்தியத்தேவனாக நடித்த பொன்னியின் செல்வன் படமும் ஹீட் ஆனது. ஆனால், கடைசியாக வெளியான அவரது 25வது படமான ஜப்பான் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. 


மேலும் படிக்க | வெயிட் பார்டியாக மாறிய சந்தானம்..முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


கார்த்தியின் சொத்து மதிப்பு..


கார்த்தி நடித்திருந்த பருத்தி வீரன் படத்தின் பிரச்சனை, தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் கசிந்துள்ளது. கார்த்தியிடம் விதவிதமான சொகுசு கார்கள் இருப்பதாகவும், அதுபோக சொந்தமாக சென்னையில் இவருக்கு பெரிய வீடு ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தி இருக்கிறாராம். தற்போது அவர் ஒரு படத்திற்கு (Karthi Salary Per Movie) ரூ.18 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, விளம்பர படங்களில் நடிக்கவும் ரூ.1 கோடியை கார்த்தி சம்பளமாக பெருகிறாராம். மொத்தமாக கார்த்திக்கு ரூ.80-100 கோடி வரை சொத்து இருக்கலாம் என பேசப்படுகிறது. 


சமூக நலசேவைகளில் கார்த்தி..


நடிகர் கார்த்தியின் குடும்பம், சினிமாவில் மட்டுமன்றி சமூகத்திற்கு தேவையான சில நல்ல காரியங்களையும் செய்து வருகிறது. இவர்களின் குடும்பம், அகரம் எனும் அரக்கட்டளையை நடத்தி வருகிறது. இதன் மூலம் இவர்கள் பல ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவையினை வழங்கி வருகின்றனர். நடிகர் கார்த்தியும், உழவன் எனும் அரக்கட்டளையை தொடங்கி விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இது மட்டுமல்லாமல், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளராகவும் இவர் பதவியில் இருக்கிறார். 


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ