இயக்குநராக அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
Sivakarthikeyan Directorial Debut : நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் தான் தயாராக இருப்பதாகவும் ஒரு நடிகர் கூறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Sivakarthikeyan Directorial Debut : சின்னத்திரையுலகில் தொகுப்பாளராக இருந்து, துணை நடிகராக கோலிவுட்டிற்குள் அறிமுகமாகி, இப்போது முன்னணி ஹீரோக்களுக்கே போட்டியாக வளர்ந்து நிற்கும் நாயகன், சிவகார்த்திகேயன். பேச்சுத்திறமை, பாடும் திறமை போன்றவற்றால் திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்த இவர் பின்னாளில் பாடல்களும் பாட தொடங்கி இவர், விஜய் படத்திற்கும் பாடல் எழுதி அதை ஹிட்டும் ஆக்கினார். சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி, வளர்ந்து வரும் ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இவர், இப்போது இயக்குநராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இயக்குநராக அறிமுகம்:
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநராக அறிமாக உள்ளதாக ஏற்கனவே இணையத்தில் தகவல்கள் வெளியானது. நடிகர் சூரி நடித்திருக்கும் கருடன் திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷனிற்காக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி அவர் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது சிவகார்த்திகேயன் இயக்கும் படம் குறித்த தகவல்களை அவர் தெரிவித்தார்.
அப்போது, சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் இருக்கும் ஒரு கதை குறித்து சிவகார்த்திகேயன் பேசியதாகவும், அது தனக்கு நன்றாக நினைவில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த கதையில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் சூரியிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்போது தனக்கு அவரது தயாரிப்பில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பதாகவும், காலம் கைகூடினால் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் சூரி:
சூரி, விடுதலை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து அவருக்கு லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் தயாரிக்கும், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ஆனா பென் என்ற மலையாள நடிகை நடிக்கிறார்.
மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த படங்கள்..
சூரியும் சிவகார்த்திகேயனும் திரைக்கு முன்னாள் மட்டுமல்ல, திரைக்கு பின்னாலும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இருவரும் இணைந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, டான், மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்பட பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அது மட்டுமன்றி, இவர்கள் நடித்த படங்கள் பெரும்பாலானவை குடும்ப கதைகளாகவோ காமெடி கதைகளாகவோதான் இருந்தன. தற்போது சூரியும் சிவகார்த்திகேயனும் சீரிஸான ஹீரோக்களாக மாறிவிட்டனர். இதனால் தனித்தனியே நல்ல கதைகளில் ஹீரோக்களாக நடித்து வருகின்றனர்.
விடுதலை பாகம் 2:
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் சூரி, காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதிக்கும் இவருக்கும் இந்த படத்தில் வலுவான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த மக்கள், அடுத்த பாகத்தில் இவரை பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ