ஹீரோவை விட வில்லன் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர். விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர், விக்ரம் மற்றும் ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்ததாக அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். முதல் பாகத்திலேயே இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வயசாச்சுனா லவ் பண்ணகூடாதா...பாக்கியலட்சுமி கோபி கவலை!


இரண்டாவது பாகத்தில் நடிக்க படக்குழு அணுகியபோதும் கால்ஷீட் பிரச்சனை இருந்துள்ளது. இருப்பினும் சில சில அட்ஜெஸ்ட்மெண்டுகளுக்கு இடையே புஷ்பா 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஜய் சேதுபதி. விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தியுள்ளாராம். இருப்பினும், ஹிந்தி வெப்சீரீஸ் மற்றும் 4 இந்திப் படங்களில் விஜய் சேதுபதியை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புக் செய்துள்ளனர். தொடர்ச்சியான படங்களின் வருகையால் மிகவும் பிஸி ஷெட்யூலில் சிக்கியுள்ளார் விஜய்சேதுபதி.



அவரை தன்னுடைய அடுத்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சி எடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். சர்தார் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிக்கவைக்க ராஜூ முருகன் எடுத்த முயற்சி இப்போதைக்கு கைகூடவில்லையாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு கால்ஷீட் பிரச்சனை இருக்கிறதாம். இதுதவிர ஒரு படத்தில் நடிக்க அவர் சுமார் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதும் ராஜூ முருகன் எடுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒத்துவரவில்லையாம். பட்ஜெட்டை பாதிக்கும் என்பதால் முதலில் விஜய் சேதுபதியை கமிட் செய்யலாம் என நினைத்தவர்கள், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். 


நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் விருமன் படம் விரைவில் ரிலீஸூக்கு வர இருக்கிறது. சர்தார் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க, இந்த ஷூட்டிங்கை முடித்தவுடன் ராஜூ முருகனுடன் கைகோர்க்க இருக்கிறார். 


மேலும் படிக்க | எனக்கு கொலை மிரட்டல் கொடுக்குறாங்க - பதறிய பிக்பாஸ் பிரபலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR