எனக்கு கொலை மிரட்டல் கொடுக்குறாங்க - பதறிய பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமான மனு பஞ்சாபி என்கிற போட்டியாளருக்கு மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2022, 12:38 PM IST
  • பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் மனு பஞ்சாபி.
  • இவருக்கு தற்போது இணையத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
  • மிரட்டல் விடுத்தவரை உடனடியாக போலீஸ் கைது செய்துள்ளனர்.
எனக்கு கொலை மிரட்டல் கொடுக்குறாங்க - பதறிய பிக்பாஸ் பிரபலம்! title=

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று சில மொழிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானவர் மனு பஞ்சாபி.  இவரை பற்றிய ஒரு செய்தி தற்போது அவரது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அதாவது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவிற்கு எப்படி கொலை மிரட்டல் வந்ததோ அதேபோல தனக்கும் இப்போது கொலை மிரட்டல் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ManuPunjabi

மேலும் படிக்க | வயசாச்சுனா லவ் பண்ணகூடாதா...பாக்கியலட்சுமி கோபி கவலை!

இதனைத்தொடர்ந்து தனக்கு மர்ம நபர்கள் விடுக்கப்பட்ட  கொலை மிரட்டல் பற்றி மனு போலீசில் புகாரளிக்க, ஜெய்ப்பூர் போலீசார் விரைந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.  இதுகுறித்து வெளியான தகவலின்படி, 31 வயதாகும் மனுவிற்கு மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர்கள் அனுப்பிய செய்தியில், உடனடியா ரூ.10 லட்சத்தை நீ தர வேண்டும், இல்லையெனில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவிற்கு நடந்த கதி தான் உனக்கும் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.  மேலும் அந்த நபர் தன்னை லாரன்ஸ் பிஷ்ணோயின் கும்பலை சேர்ந்தவர் என்றும் கூறியிருக்கிறார்.  பின்னர் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் டோனி என்று அழைக்கப்படும் குல்வீர் சிங் சவ்கான் என்கிற போதை ஆசாமியை கைது செய்தனர்.

ManuPunjabi

போலீஸாரின் இந்த விரைவான நடவடிக்கைக்கு மனு பஞ்சாபி நன்றி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன், எனக்கு பாதுகாப்பது அளித்து, குற்றவாளியை பிடித்த போலீஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.  ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் சித்து மூஸ்வாலாவை கொன்றபடி உன்னையும் கொன்று விடுவோம் என்று எனக்கு வந்த மிரட்டலால் நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன், இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன்' என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News