விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ-ஹீரோயின் இவங்கதான்! யார் தெரியுமா?
Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jason Sanjay Movie Cast : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர், விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருக்கிறார். இவர் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்ன வெளியானது.
விஜயின் மகன் சஞ்சய்:
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தொழிலதிபரின் மகனான சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கின்றனர். விஜய், தன் மகன் மீது அதிக பாசம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் நடித்த சில படங்களில் கூட பாடல்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக போக்கிரி படத்தில் வரும் வசந்த முல்லை பாடலிலும்,வேட்டைக்காரன் படத்தில் வரும் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலிலும் இவர் வருவார். பார்ப்பதற்கு மினி விஜய் போலவே இருந்த இவர், தற்போது 24 வயது வாலிபராக வளர்ந்து நிற்கிறார்.
ஜேசன் சஞ்சய், சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் உள்ள திரைப்படக் கல்லூரி ஒன்று பயின்று வந்தார். சமீபத்தில் தனது படிப்பை முடித்துக் கொண்ட இவர் சொந்த ஊருக்கு திரும்பினார். இதை எடுத்து அவர் லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பிறகு படத்தின் கதாநாயகன் கதாநாயகி குறித்த தகவல்களோ, படப்பிடிப்பு எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்து தகவலோ தெரியவில்லை. ஆனால் இப்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க | Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!
விஜய் மகனின் படத்தில் இடம் பெறுபவர்கள்:
சஞ்சய், தனது படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுக்க, பல்வேறு வளர்ந்து வரும் நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் கவின், அசோக் செல்வன் உள்ளிட்டோரின் பெயர்களும் அடக்கம். ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் இவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் இதனால் இன்னொரு வாரிசு நடிகரிடம் சஞ்சய் சென்றதாகவும் குறிப்பிடுகிறது. அவர் வேறு யாருமில்லை, விக்ரமின் மகன் துரு விக்ரம் என்று சொல்லப்படுகிறது. ஆதித்யா வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அடுத்து மகான் படத்தில் நடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்திலும் நடித்து வருகிறார். இவர்தான் தற்போதைக்கு விஜயின் மகன் படத்தில் ஹீரோவாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கதாநாயகி யார்?
ஜேசன் சஞ்சய் இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதும் ஒரு வாரிசு நடிகைதான் என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதீ ஷங்கர் தான் அவர் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே விரும்ன், மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமன்றி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகன் ஏ ஆர் அமீன் இசையமைக்க உள்ளதாக குறிப்பிடுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் புகைப்படங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ