விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா? ‘இந்த’ 4 பேரில் ஒருவர்தான்..!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக நடிக்க 4 ஹீரோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 9, 2023, 05:02 PM IST
  • விஜய்யின் மகன் ஜேசன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
  • இதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
  • ஹீரோவாக நடிக்க 4 நடிகர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்.
விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா? ‘இந்த’ 4 பேரில் ஒருவர்தான்..!   title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் ஒரு பக்கம் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க, இவரது மகன் ஜேசன் சஞ்சய் மறுபக்கம் இளம் இயக்குநராக உருவாகி வருகிறார். இவர், லண்டனில் உள்ள டொராண்டோ திரைப்பட கல்லூரியில் படித்துள்ளார். இதன் மூலம் இவர் திரைக்கதை அமைப்பது மற்றும் பட இயக்கம் ஆகியவற்றை கற்றுக்கொண்டுள்ளார். இவர், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். ஜேசனின் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்க 5 பேர் தேர்வ்ய் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் யார் தெரியுமா? 

அதர்வா:

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. இவர், பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் தற்போதைய சாக்லேட் பாய் ஹீரோக்களுள் இவரும் ஒருவர். அதர்வா, கடைசியாக ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அட்ரஸ், தனல், நிறங்கள் மூன்று போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இவர் ஜேசன் சஞ்சய் தன் படத்திற்காக தேர்ந்தெடுத்து வைத்துள்ள ஹீரோக்களுள் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | சந்திரமுகி-2 ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..! காரணம் தெரியுமா..?

துருவ் விக்ரம்:

பிரபல நடிகர் சியான் விக்ரமின் அன்பு மகன், துருவ் விக்ரம். இவர், ஜேசனின் நெருங்கிய நண்பர் என்றும் சொல்லப்படுகிறது. துருவ், ஆதித்யா வர்மா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். தன் தந்தையுடன் ‘மஹான்’ படத்தில் நடித்திருந்தார். இவரும் ஜேசன் சஞ்சயின் ஹீரோ சாய்சில் உள்ளதாக கூறப்படுகிறது. 

ஹரிஷ் கல்யாண்:

தமிழ் சினிமா ரசிகைகளுக்கு க்ரஷ் மெட்டிரியலாக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது கொஞ்சம் அதிக அளவு பட்ஜெட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். கடைசியாக கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வெளியான லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இவரையும் தன் பட ஹீரோ தேர்வில் வைத்துள்ளாராம் ஜேசன். 

கவின்:

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களுள் ஒருவர், கவின். சின்னத்திரையில் ஜொலித்து வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய திரைக்கு எண்ட்ரி கொடுத்தது. இவர் ஹீரோவாக நடித்திருந்த லிஃப்ட், டாடா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவர்,‘ஸ்டார்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஜேசனின் ஹீரோக்கள் லிஸ்டில் இவரும் ஒருவர். 

படம் குறித்து ஜேசன் கூறியது என்ன..? 

ஜேசன் சஞ்சய் தனது படம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது படம் குறித்து பேசிய அவர், கதைக்கு ஏற்ற நடிகர்களையும் டெக்னீஷியன் குழுவையும் தேடி வருவதாக தெரிவித்திருந்தார். முதல் படத்திலேயே லைகா நிறுவனத்துடன் கைக்கோர்த்திருப்பது பெருமையளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய்யும் தன் மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | விவேக் to மாரிமுத்து..மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கோலிவுட் பிரபலங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News