ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை! யார் தெரியுமா?
Actress Was Paid More Than Actor Rajinikanth : ஒரு நடிகை, ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க அவரை விட அதிகமாக சம்பளம் அதிகமாக வாங்கியிருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
Actress Was Paid More Than Actor Rajinikanth : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர், ரஜினிகாந்த். இவரது இயற்பெயரான ‘சிவாஜி ராவ்’ என்று கூறுவதை விடவும், ‘சூப்பர்ஸ்டார்’ என்று கூறினால்தான் பலருக்கு தெரியும். கோலிவுட்டில் புதிய ட்ரெண்டை செட் செய்து, ஹீரோ என்று அனைவருக்கும் தெரியும்.
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்..
திரைத்துறை, முன்பு போல அல்ல இப்போது பெரிதாக மெருகேறி விட்டது. முன்னர், ஆயிரங்களிலும் லட்சங்களிலும் சம்பளம் வாங்கி வந்தனர். ஆனால், இப்போது கோடிகளுக்கு குறைவாக யாரும் சம்பளம் வாங்கவில்லை. அதிலும், முன்னணி நடிகர்கள் அதிகமாகத்தான் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், தென்னிந்தியாவிலேயே பெரிய நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் மட்டும் குறைவாகவா சம்பளம் வாங்குவார்? இவர், தற்போது தனது படம் ஒன்றுக்கு 230 கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. இவருடன் நடித்த நடிகை ஒருவர், ஒரு படத்தில் அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
மேலும் படிக்க | Kalki 2898 AD : கல்கி படத்தில் அதிக சம்பளம் யாருக்கு? ‘அந்த’ நடிகருக்குதான்...
அந்த நடிகை யார்?
அவர் வேறு யாருமில்லை, மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவிதான். இவரும், ரஜினியும் 1976ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்திருப்பர். இது, கே.பாலச்சந்தரின் படமாகும். இதில், ரஜினியுடன் நடித்தது குறித்து ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பேசியிருந்தார். அதில், ஸ்ரீதேவிக்கு, அப்படத்தில் நடிக்க சுமார் ரூ.5000 வரை சம்பளம் வழங்கப்பட்டதாம். ரஜினிக்கு, ரூ.2,000 கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களை தாண்டி அப்படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கிய நடிகர், கமல்ஹாசன். இவருக்கு சம்பளம் ரூ.30,000 வழங்கப்பட்டதாம். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.
இருவருக்குமே முதல் படம்..
மூன்று முடிச்சு திரைப்படம், ரஜினிகாந்திற்கும் ஸ்ரீதேவிக்கும் (தமிழில்) முதல் படமாகும். கமல்ஹாசன், அந்த படத்தில் நடிக்கும் போது, ஏற்கனவே பெரிய ஸ்டாராக இருந்தார். இதனால்தான் அவருக்கு அப்படத்தில் 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து இப்போது திரும்பி பார்க்கையில், பல மாற்றங்கள் திரையுலகில் நிகழ்ந்திருக்கிறது. ரஜினி குறைவாக சம்பளம் வாங்கி கொண்டிருந்த காலத்தில், ஸ்ரீதேவியின் தாயாரிடம் “கமல்ஹாசன் அளவிற்கு சம்பளம் வாங்க வேண்டும்” என்று பேசுவாராம். அதற்கு அவரது தாயாரும், “ஒரு நாள் நீயும் அப்படி சம்பளம் வாங்குவாய்..” என்று கூறினாராம். இந்த அழகிய நினைவினை ஸ்ரீதேவி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க | நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ