Actress Yashika Aannand Padikadha Pakkangal Movie: நடிகை யாஷிகா ஆனந்த் (24) தமிழ் திரையுலகில் பலராலும் கவனிக்கப்படும் நட்சத்திரம் ஆவார். ஜீவா நடிப்பில் 2016ஆம் ஆண்டில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த யாஷிக் ஆனந்திற்கு, அதே ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற துருவங்கள் பதினாரு திரைப்படம் நல்ல அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, சோம்பி, முக்குத்தி அம்மன், பகீரா, சைத்ரா, சில நொடிகளில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என தொடர்ந்து யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தாண்டும் பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக யாஷிகா ஆனந்த் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்2இல் (2018) பங்கேற்றிருந்தார். அதன்மூலம், யாஷிகா ஆனந்த் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையேவும் சென்றடைந்தார் எனலாம். 2021ஆம் ஆண்டு யாஷிகா ஆனந்த் ஒரு விபத்தில் சிக்கி, தற்போது அதில் இருந்து முழுமையாக மீண்டு வந்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


மே 17 அன்று ரிலீஸ்


பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின்னர் அவர் மீதான கவனமும் அதிகமானது. அவரை இன்ஸ்டாகிராமில் 4.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். அதாவது 41 லட்சம் பேர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்கின்றனர் எனலாம். அந்தளவிற்கு யாஷிகா ஆனந்த் பிரபலமானவராக அறியப்படுகிறார். குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் மத்தியில் யாஷிகா ஆனந்த் மீது அதிக அறிமுகம் இருக்கிறது எனலாம். எனவே, அவரின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இளைஞர்கள், பெண்களிடம் அதிக கவனம் ஏற்படும். 


மேலும் படிக்க | ரஜினியின் கூலி படத்திற்கு 60 கோடி சம்பளம் வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ்!


இந்நிலையில், யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற மே. 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அந்த படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுகுறித்து படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் இயக்குனர்  செல்வம் மாதப்பன், தயாரிப்பாளர் முத்துக்குமார், நடிகர் ஆதவ்பாலாஜி உள்ளிட்டோர்  சென்னை வடபழனியில் எஸ் மூவி பார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட்டாக பேசினர்.  அப்போது, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து பெண்கள் எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பது குறித்தும் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் மையக் கருத்தாக இருப்பதாக தெரிவித்தனர். 
 
கூல் சுரேஷ் போன்றவர்களுக்கு...


மேலும், இந்த திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும என்றும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் இந்த திரைப்படத்தை தாங்கள் எடுத்திருப்பதாகவும் கூறினர். மேலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த திரைபடத்தை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர். கூல் சுரேஷ் போன்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்ற திரைப்படங்களுக்கு ஊடகங்கள் கொடுப்பதில்லை என்றும் இது போன்ற திரைப்படங்களை வெற்றி பெற செய்யும்போது பலருடைய கனவுகள் இதன் மூலம் நிறைவேறும் என்றும் தெரிவித்தனர். புதியவர்களுக்கு இதன் மூலம் பல்வேறு திரைப்பட  வாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறினர்.


இந்தாண்டு தமிழ் திரையுலகில் பெரிய வெற்றி ஏதும் வெளியாகவில்லை. பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம் என அடுத்தடுத்து மலையாளப் படங்களே பெரிய வசூலை குவித்து வந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நிறைவுபெற்ற பின்னரே திரைப்படங்கள் அதிகம் வெளியாக தொடங்கியிருக்கிறது. குறிப்பாக மே மாதம் கோடை விடுமுறை என்பதை கருத்தில் கொண்டு பல திரைப்படங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. தற்போது திரையரங்குகளில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படமும், இளன் - கவின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ஸ்டார் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, மே 17ஆம் தேதி அன்று உறியடி படத்தின் இயக்குநரும் நடிகருமான விஜயகுமார் நடிப்பிலும், பல தரப்பினரின் வரவேற்பை பெற்ற சேத்துமான் இயக்குநருமான தமிழின் இயக்கத்திலும் வெளியாகியுள்ள 'எலக்சன்'திரைப்படம் வெளியாக உள்ளது. 


மேலும் படிக்க |KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள் - சரத்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ