தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது மகளான அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகியிருக்கிறார். முத்தையா இயக்கத்தி கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி இணைந்திருக்கும் விருமன் படத்தில் அதிதி கதாநாயகியாக நடித்திருக்கிறார். படம் வெளியாவதற்கு முன்னர் வெளியான கஞ்சா பூ கண்ணாலே பாடலிலேயே அதிதியை ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர். அதனையடுத்து வெளியான மதுர வீரன் அழகுல பாடலில் அவரது நடனம், முக பாவனைகள் மட்டுமின்றி குரலையும் ரசிக்க தொடங்கிவிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் விருமன் படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதிதி ஷங்கருக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி நடிப்பு,நடனம்,பாடல் என கம்ப்ளீட் பேக்கேஜாக அதிதி கிடைத்துள்ளார் எனவும் கூறுகின்றனர்.



சூழல் இப்படி இருக்க விருமன் படத்தின் முதல்நாள் முதல் காட்சி பார்த்த நடிகர் கூல் சுரேஷ், தான் அதிதி ஷங்கரை காதலிப்பதாகவும். அவருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க வேண்டும்.


மேலும் படிக்க | தாய் மண்ணே வணக்கம் - ஸ்பெயினில் சுதந்திர தினம் கொண்டாடிய நயன், விக்கி


அப்படி இல்லையென்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என தியேட்டருக்கு வெளியே பேசினார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.



இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், “சென்ற வாரம் விருமன் ரிலீஸ் அப்போ, ஷங்கர் சாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அந்த மாதிரி பேசியிருக்க கூடாது. நான் பள்ளிக்கூடம் படித்தபோது என்னுடன் தேன்மொழி என்று ஒருவர் படித்தார். விருமன் படத்தை பார்த்தபோது எனக்கு அந்த நியாபகம் வந்தது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு அதிதியை ஐ லவ்யூ என்று கூறிவிட்டேன். ஷங்கர் சார் என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மனதை கஷ்டப்படுத்துற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதிதி எனக்கு தங்கை மாதிரி’’ என்றார்.


மேலும் படிக்க | ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ