உருவாகிறது கங்குலியின் பயோ பிக்?... இயக்குநர் யார் தெரியுமா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை படமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர்களில் சௌரவ் கங்குலிக்கு முக்கிய இடம் உண்டு. இவரது கேப்டன்சி காலத்தில்தான் சேவாக், யுவராஜ், கைஃப், ஜகீர் கான், ஹர்பஜன் சிங் போன்ற சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆக்ரோஷ் முலாமை பூசியவரும் கங்குலிதான்.
தற்போது அவர் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். ஐபிஎல் போட்டிகள் நடந்துவருவதால் பிசிசிஐ தலைவராக மிகவும் பொறுப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துவருகிறார் கங்குலி.
இந்நிலையில் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குலியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியை நேரில் பார்த்து ரசித்த அவர் போட்டிக்கு பிறகு இதுதொடர்பாக கங்குலியிடம் பேசியதாக தெரிகிறது.
முன்னதாக கங்குலியும் சில காலம் முன்பு, தன்னுடைய பயோபிக்கை கொண்டு வர ஆசைப்படுவதாக ட்விட்டரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | லக்னோ தோல்விக்குப் பிறகு காம்பீரின் ரியாக்ஷன் வைரல்
இந்திய திரையுலகில் விளையாட்டு துறையில் சாதித்தவர்களின் பயோபிக் வருவது அதிகரித்துள்ளது. தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Watch: ஷிகர் தவானை அடி வெளுத்த அவரின் தந்தை - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR