கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் எலிமினேட்டர் மேட்சில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களமிறங்கின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியுடன் களமிறங்கிய கேப்டன் டூபிளசிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக்அவுட்டாக வெளியேறினார். விராட் கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 9 ரன்களில் வெளியேறினார்.
Caption contest pic.twitter.com/6wzLOA4u18
— Gabbbar (@GabbbarSingh) May 25, 2022
3வது டவுனில் களமிறங்கிய ராஜாட் படிதார், லக்னோ அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். கிடைத்த பந்துகளையெல்லாம் எல்லைக்கோட்டை நோக்கி விளாசிய அவர், 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்சர்களும், 12 பவுண்டரிகளும் அடங்கும். அவருக்கு பக்கப் பலமாக களமாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
மேலும் படிக்க | சச்சினின் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருந்த முன்னாள் வீரருக்கு நேர்ந்த கதி
லக்னோ அணியின் பவுலிங் படுமோசமாக இருந்தது. தினேஷ் கார்த்திக் மற்றும் படிதார் உள்ளிட்டோரின் அருமையான கேட்சுகளை அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து கோட்டைவிட்டனர். இதனால், பெங்களூரு அணியின் அதிரடியை அந்த அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியுற்ற லக்னோ அணி வெளியேறியது.
Gautam Gambhir and KL Rahul had a little chat after the game. pic.twitter.com/eSNmxcFiT0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 25, 2022
இந்தப் போட்டிக்குப் பிறகு லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலை காம்பீர் முறைத்து பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேட்சின்போதே லக்னோ வீரர்கள் அடுத்தடுத்து கேட்சுகளை விடும்போது காம்பீர் கடுப்பானார். இந்த அதிருப்தியை தன்னுடைய முகத்திலும் காட்டிக் கொண்டே இருந்தார். இந்நிலையில், காம்பீர் ரியாக்ஷன்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | ’ஆர்சிபி..ஆர்சிபி..ஆர்சிபி’ ரசிகர்களின் கோஷத்தால் வென்ற பெங்களுரு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR