விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சி: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் :
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியுள்ள படம், விடாமுயற்சி. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி (Vidaa Muyarchi) படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த படத்தில் அஜித் (Ajith Kumar) ஹீரோவாக நடித்துள்ளார், மேலும் படத்தில் த்ரிஷா, கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரெஜினா கசான்ட்ரா நடிக்கிறாராம். இவர்கள் மட்டுமன்றி, அர்ஜூன், ஆரவ், அர்ஜூன் தாஸ் ஆகியோரும் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.


மேலும் படிக்க | Kavin: கவினுக்கு ஜாேடியாக நடிக்கும் நயன்தாரா!? இதை எதிர்பாக்கவே இல்லையே..


விடாமுயற்சி படப்பிடிப்பு நிலவரம் :
இதனிடையே விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், அஜித் குமார் தனது பைக் டூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் பிசியாக இருந்தார். இதனால், இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு பறந்தார். அங்கு, சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


அடுத்த லொகேஷன் எங்கே :
அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து எந்த ஒரு அப்டேட் இல்லாத காரணத்தால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவித்தனர்.


விடாமுயற்சி படத்தின் ஆக்ஷன் காட்சி லீக் :
இந்நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகின்றனர். அந்த வகையில் அப்போது செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதோ அந்த வைரல் புகைப்படங்கள் :



 



 



மேலும் படிக்க | SK 23: சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! ஹீரோயின் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ