புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள் வழங்கிய அல்லு அர்ஜுன்!
புஷ்பா குழுவினருக்கு தங்க நாணயங்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கினார் அல்லு அர்ஜுன்.
புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார்.
ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RRR படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!
ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் இந்த செயல், புஷ்பா குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களின் பாராட்டை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பையும் பெற்றுள்ளது. “புஷ்பா குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் அல்லு அர்ஜுன் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, அவர்களுக்கு தங்கம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க விரும்பினார். தனது எண்ணத்தை உடனடியாக அவர் செயல்படுத்தினார்,” என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.
ALSO READ | 'பீஸ்ட்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR