சோகமான நிலைமையில் அங்காடித் தெரு நடிகை...உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ...
அங்காடித் தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி, பிளாக் பண்டி போன்ற பலர் நடித்திருந்த படம் அங்காடித் தெரு. இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தவர் நடிகை சிந்து. கொரோனா காரணமாக திரைதுறை சார்ந்தவர்களும், பொது மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில், தன்னால் முடிந்த உதவிகளை அவர் தொடர்ந்து மக்களுக்கு செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை நடிகர் பிளாக் பாண்டி வெளியிட்டுள்ள வீடியோவில் அவரும் சிகிச்சையில் இருக்கும் சிந்துவும் பேசி இருக்கிறார்கள். மருத்துவ உதவிக்காக சிரமப்படும் நிலையில் இருக்கும் அவர் பொருளாதார உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ALSO READ | மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் காளான்கள் பற்றி தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
அவருக்கு முதுகுத் தண்டிலும் கேன்சர் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு திரைத்துறை சார்ந்த சிலர் உதவி உதவி செய்துவரும் நிலையில். மிகவும் கடினமான இந்த சூழ்நிலையில் அவர் உதவி கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ALSO READ | மார்பக புற்றுநோயில் இருந்து உயிர்தப்பிய 3 வயது சிறுமி...