கடந்த 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படம் வாயிலாக  இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்துக்கு இது 10ஆவது வருடம். பத்தாண்டில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ள அனிருத் கோலிவுட்டின் பிஸி இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் தற்போது இருந்துவருகிறார். ரஜினியின் 169ஆவது படம், கமலுடன் ‘விக்ரம்’, விஜய்யுடன் பீஸ்ட், அஜித்தின் 62ஆவது படம், சிவகார்த்திகேயனுடன் டான், விஜய்சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என டாப் நடிகர்களின் படங்களில் ஒரே நேரத்தில் செம பிஸியாக இருந்துவருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கைப் பொறுத்தவரை அஞ்ஞாதவாசி, ஜெர்ஸி மற்றும் கேங்க் லீடர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத்,  ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் தமிழ் வெர்சனில் பாடலும் பாடியுள்ளார். இதனிடையே தெலுங்கிலும் தனது கால் தடத்தை வலுவாகப் பதிக்க அனிருத் தயாராகிவருவதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில், ஜூனியர் என்.டி.ஆர், ரவிதேஜா மற்றும் ராம்சரண் ஆகியோரின் படங்களுக்கு அவர் அடுத்தடுத்து இசையமைக்கவுள்ளாராம். ஸ்டார் நடிகர்களுக்கு அவர் வரிசையாக இசையமைக்கவுள்ளதால் தெலுங்கில் கலக்கிவரும் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் தமனுக்குப் போட்டியாக அனிருத் மாறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!


                                                                     


இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சிவா நிர்வானா இயக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த படங்களுக்கு அனிருத் இசையமைத்ததில்லை. தற்போது முதன்முறையாக இந்தக் கூட்டணி அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR