ஏர்.ஆர்.ரகுமான் மகள்கள் வாங்கியிருக்கும் புதிய காரின் விலை!
இசைப்புயல் ஏஆர் ரகுமான் மகள்கள் வாங்கியிருக்கும் விலை உயர்ந்த காரின் விலை இப்போது தெரிய வந்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் உலக அடையாளமாக இருப்பவர் ஏஆர் ரகுமான். தமிழ் பாடல்களை உலக அரங்குக்கு எடுத்துச் சென்று பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட், பாலிவுட்,ஹாலிவுட் என ஒரே நேரத்தில் முன்று துறைகளிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அவர், ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | துணிவில் அஜித் இல்லை... அவரது டூப்தான் நடித்தார் - வெளியான அதிர்ச்சி தகவல்
சினிமா வேலைகளே இவ்வளவு பிஸியாக இருக்கும் சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் இசைக் கச்சேரிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். செம சுறுசுறுப்பாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான்,அவ்வப்போது தன் மகன் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைபடத்தை வெளியிடுவார். இந்த முறை அவர் இல்லாமல் மகள்கள் மட்டும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் விலை உயர்ந்த காரின் பின்பு நின்று கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்துள்ளனர்.
அந்த கார் Porsche நிறுவனத்தின் காராகும். மின்சார காரான அந்த சொகுசு காரின் விலை சுமார் 2 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சொகுசு கார், பேட்டரி மூலம் இயங்கக்கூடியது.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜா, விக்ரமா... மாதவன் எடுத்திருக்கும் முடிவு... உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ