உலகளவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை ஏ.ஆர்.ரகுமான் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். கொரோனா காரணமாக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணத்தையும் சிம்பிளாக நடத்தி முடித்துள்ளார் ரகுமான். ஆம், ரகுமானின் மூத்த மகள் கதீஜா - ரியாசுதீன் ஷேக் முகமது ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'ஏகே61' படத்தில் இணையப்போகும் 'அசுரன்' பட பிரபலம்?


இதனை ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். கதீஜா மற்றும் ரியாசுதீன் ஆகியோருடன் குடும்பமாக நின்று எடுத்த புகைப்படத்தை ரகுமான் வெளியிட்டுள்ளார். இந்த திருமண விழாவில் ரகுமான் குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ரகுமானின் மருமகன் ரியாசுதீன் சவுண்ட் என்ஜினியர் ஆவார். ரகுமானிடமே அவர் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.



தனது திருமணம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கதீஜா, ‘தன் வாழ்நாளில் எதிர்பார்த்த நாள் இன்று’ என்ற மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோரிங்கில் படுபிஸியாக இருக்கிறார். அவரிடம் சிவகார்த்திகேயனின் அயலான், விக்ரமின் கோப்ரா ஆகிய படங்கள் வரிசையில் உள்ளன. பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இரவின் நிழல்’ படத்துக்கு இசையமைத்து முடித்துள்ளார். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரகுமான் தற்போது முழு மூச்சாக தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கியுள்ளார். அதில், மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கான இசையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். 


மேலும் படிக்க | சினிமாவில் கமல் கணக்கு தப்பாக போகுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR