தமிழ்நாட்டை தாண்டி, இந்திய அளவில் ட்ரெண்டிங்கிள் உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்று பிக்பாஸ். தமிழில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தறப்போது 7வது சீசனில் (Bigg Boss 7 Tamil) அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதில், வாரா வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட காலம் மலையேறி, வாரம் இரண்டு போட்டயாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புது ரூல்ஸ்களுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள்:


பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து சீசன்களிலும் புதுப்புது ரூல்ஸ்கள் விதிக்கப்படுவதை தொடர்ந்து, இந்த சீசன் வீட்டின் அமைப்பே மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு-ஸ்மால் பாஸ் வீடு என இரண்டு வீடுகளாக இந்த சீசன் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், பிக்பாஸ் விதிக்கும் சில ரூல்ஸ்களின் அடிப்படையில் 6 பேர் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப்படுகின்றனர்.  இதனால், பிக்பாஸ் வீட்டாளர்கள் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டாளர்கள் என போட்டியாளர்கள் இரு துருவங்களாக பிரிந்திருக்கின்றனர். இதில், சில நாட்களுக்கு முன்னர் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் (BB 7 Wild Card Contestants)அனுப்பி வைக்கப்பட்டனர். 


வெளியேறிய வைல்ட் கார்ட் போட்டியாளர்…


மேடை மற்றும் பட்டிமன்ற பேச்சாளரான அன்னபாரதி, (Anna Bharathi) வைலட் கார்ட் மூலம் பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்தார். இவர் வந்தது முதலே போட்டியாளர்கள் பலருக்கு இவர் கூறிய கருத்துகள் பிடிக்காமல் இருந்தது. வந்த முதல் வாரமே இவரை எவிக்ட் செய்வதற்காக நாமினேட் செய்தனர். இந்த வாரம் கமல்ஹாசனின் எபிசோடில் இவர் வாக்குகள் குறைவாக பெற்ற காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப் ஆண்டனி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


வாங்கிய சம்பளம் எவ்வளவு? 


அன்னபாரதி, சரியாக ஒரு வாரம் மட்டுமே பிக்பாஸ் இல்லத்தில் இருந்தார். வழக்கமாக பிக்பாஸ் வீட்டார் அனைவருக்குமே ஒரு நாளைக்கு இந்த தொகை சம்பளம் என்ற வகையில் மொத்தமாக பெரிய தொகை வழங்கப்படும். அந்த வகையில், அன்னபாரதிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அன்னபாரதிக்கு (Anna Bharathi Salary in BB 7) ஒரு நாளைக்கு ரூ.20ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். 


பிரதீப்பிற்கு ரெட் கார்டு..


பிக்பாஸ் சிசன் 7ல் வலுவான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டவர், பிரதீப் ஆண்டனி. நடிகரான இவர், இந்த போட்டியில் நுழைந்ததில் இருந்தே சர்ச்சைக்குரிய பல கருத்துகளை கூறி வந்தார். இவரது நடவடிக்கைகள் பல போட்டியாளர்களுக்கு பிடிக்காமல் போனது. இந்த நிலையில், இவர் சமீபத்திய எபிசாேட் ஒன்றில் கூல் சுரேஷை மரியாதை குறைவாக பேசினார், தகாத வார்த்ததைகளால் திட்டினார். இதற்கு தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பேசினார். இதனால் உரிமை குரல் எழுப்பிய சக பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர், பிரதீப் இருப்பதால் தாங்கள் பாதுகாப்பின்மையாக உணர்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட் கார்டு (Pradeep Antony Red Card) கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


பிரதீப், (Pradeep Antony Salary) இதுவரை பிக்பாஸ் மூலம் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் பெற்றதாகவும் மொத்தமாக 6 லட்சம் வரை சம்பாதித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பல பிரபலங்களும் ரசிகர்களும் போர் கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து போஸ்ட் போட்ட பிரதீப், “எனக்காக நின்ற அனைவருக்கும் நன்றி..” என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்! முடிவு மாறுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ