செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி பல இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் இருந்தவர் அனிதா சம்பத்.  பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார், அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் பிரபலமானார்.  சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கேற்றுக்கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட போது இவர் தான் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், எவ்வளவு தடைகளை தாண்டி வந்திருக்கிறேன் என்று பகிர்ந்துகொண்டார்.  இந்நிகழ்ச்சியின் மூலம் ஒருபுறம் இவருக்கு சப்போர்ட்டர்ஸும், ஒருபுறம் ஹேட்டர்ஸும் இருந்து வந்தனர்.  இவர் யூடியூப்  சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார், அதில் அடிக்கடி மேக்கப் வ்லாக், டெய்லி வ்லாக், போன்று பல வ்லாக்குகளையும், ஸ்கின்கேர் டிப்ஸ், ஹேர்கேர் டிப்ஸ் போன்று ரசிகர்களுக்கு டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இன்று ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!


தற்போது பலரும் யூடியூபில் ஹோம் டூர், கிட்சன் டூர், ரூம் டூர், ப்ரிட்ஜ் டூர் என்று பலவித வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர், அந்த வகையில் தற்போது இவர் புதிதாக வீடு கட்டி குடிபெயர்ந்துள்ள கனவு இல்லத்தின் ஹோம் டூர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.  சில மாதங்களுக்கு முன்னர் அனிதா - பிரபா தம்பதியினர் வீடுகட்டி குடிபெயர்ந்தனர், மிக எளிமையாக நடைபெற்ற இந்த கிரஹபிரவேச விழாவில் குறிப்பிட்ட நபர்கள் ம்மட்டுமே கலந்துகொண்டனர்.  நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனிதா மற்றும் பிரபா இருவருக்கும் இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது.



அனிதாவின் ரசிகர்கள் பலரும் நீண்ட நாட்களாக ஹோம் டூர் வீடியோ போடுங்கள் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்போது இவர் ஹோம் டூர் வீடியோ போட்டிருக்கிறார்.  இந்த கனவு இல்லத்திற்கு அனிதாவே டிசைன் தேர்ந்தெடுத்தது கூடுதல் சிறப்பு, இவர்களின் சொந்த உழைப்பில் உருவான இந்த வீடு கண்கவரும் நுண் வேலைப்பாடுகளுடன், பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.  இந்த வீடியோ காமெடியாகவும், அதேசமயம் அவர்களின் கடின உழைப்பில் நீண்ட நாளைய கனவு நிறைவேறிய திருப்தியையும் காண்பிக்கிறது.


 



மேலும் படிக்க | பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ