கிட்டத்தட்ட 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.  காதல், மோதல், நகைச்சுவை, வன்மம் என பல உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை நாம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களிடமிருந்தும் கண்டு ரசித்தோம்.  வரும் ஜனவரி 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர், ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர் தான் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடியே நடந்துவிடாது, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல்ஹாசன் சொல்வது போல இந்நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும் இறுதியில் நடப்பது ஒன்றாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாரிசு OTT-யில் எப்போது வெளியாகும்? வெளியானது தகவல்!



அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்திடாத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு டிவிஸ்ட் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது தொடர்ந்து பல சர்ச்சையான வார்த்தைகளை கூறியும், உருவக்கேலி செய்தும், எப்போதும் அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கும் அசீம் தான் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  அசீமுக்கு ஹேட்டர்ஸ் ஒருபுறம் அதிகம் இருந்தாலும், அவர் கேமை உண்மையாக விளையாடுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாள் மற்றவர்கள் போல நடிக்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கூறி வருகின்றனர்.  போலியாக இல்லாமல் உண்மையான முறையில் விளையாண்டு வரும் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்திற்கு தகுதியானவர் தான் என்று அவரது ஆதரவாளர்கள் அசீமுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.



பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வந்த அமுதவாணன் ரூ.15 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வான்டடாக வெளியேறினார்.  அதனை தொடர்ந்து மற்றொரு இறுதி போட்டியாளரான மைனா நந்தினியும் மிட்வீக் எவிக்ஷன் மூலம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.  இப்போது அசீமுடன் களத்தில் ஷிவின் மற்றும் விக்ரமன் இருவரும் உள்ளனர்.  திருநங்கையாக ஷிவினுக்கு ஆரம்பத்திலிருந்தே மக்களிடத்தில் ஆதரவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.  இவர் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதமும், கேம் விளையாடும் விதமும், அசீம் இவரை கேலி செய்தபோது கூட அவர் அதை பொறுமையாக கையாண்ட விதமும் மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.  அதேபோல விக்ரமனுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது, இவரது அரசியல் கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட நியாயமான கருத்துக்களை கேட்கவே பல் ரசிகர்கள் உள்ளனர்.  இருப்பினும் யார் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, ஞாயிற்றுக்கிழமை தான் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்பது தெரியவரும்.


மேலும் படிக்க | சென்னை திரும்பினார் நடிகர் விஜய் ஆண்டனி; வீடியோ காலில் பேசுவார் - இயக்குநர் சுசீந்திரன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ