Bigg Boss Tamil Season 6: அசீம் - ஷிவின்..இந்த முறை டைட்டில் வின்னர் யார்?

Bigg Boss Tamil Season 6 Grand Finale: பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் ஷிவின் - அசீம் இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமாகியுள்ளது. மேலும் விக்ரமன், அசீம், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே தற்போது இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 19, 2023, 11:48 AM IST
  • இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 6 க்ளைமேக்ஸ்.
  • பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார்?
  • பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.
Bigg Boss Tamil Season 6: அசீம் - ஷிவின்..இந்த முறை டைட்டில் வின்னர் யார்? title=

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. தற்போது இந்த சீசனில் 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மேலும் இந்த ஐந்து போட்டியாளர்கள் தற்போது இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதில் இறுதிப்போட்டி வரை சென்றுக்கொண்டு இருந்த கதிர் 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதால், ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் ஷவின் - அசீம் இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில் கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறிய நிலையில், அடுத்ததாக ஐந்து போட்டியாளர்களில் யார் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக மக்கள் ஆவளுடம் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

ஐந்து இறுதிப் போட்டியாளர்களின் விவரம்: 
1. அமுதவாணன்
2. ஷிவின் கணேசன்
3. விக்ரமன் ஆர்
4. முகமது அசீம்
5. மையா நந்தினி

இதற்கிடையில் கணிப்புகளின்படி, அசீம், ஷிவின் கணேசன் மற்றும் விக்ரமன் ஆகியோர் இடயே கடும் போட்டி நிலவும் என்றும், இவர்களில் இருவர் தான் டைட்டில் வின்னராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே மற்றொரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன் படி, பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஷிவின் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்துக்கு மேல் தொகை இருந்ததாகவும், அதனை எடுத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என்று மக்கள் கணித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News