தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மும்மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாய் பல்லவி. மிகவும் குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும் நேர்த்தியான கதைகளாக தேர்ந்தெடுத்து முத்திரை பதிக்கும் நடிகையாக வலம் வருகிறார். இவரது மேக்-அப் அற்ற முகமும் இயற்கையான அழகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவை. மேலும், ஒரு நடிகை என்பதை தாண்டி அனைவரிடமும் சகஜமாகவும அன்பாகவும் பழகும் தன்மை கொண்டவர் இவர். இதனால், பல பிரபலங்களும் இவருடன் படத்தில் நடிக்க விரும்புவர். இந்த நிலையில், ஒரு பிரபல பாலிவுட் நடிகர் தனக்கு சாய் பல்லவி மீது க்ரஷ் உள்ளதாக ஓபன் ஸ்டேட்மன்ட் கொடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பிரபலம் யார்? 


பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்த பதாய் ஹோ எனும் படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் குல்ஷன் தேவய்யா. இந்தி நடிகரான இவர் ஷைத்தான், கமேண்டோ, ப்ளர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது சாய் பல்லவி மீது தனக்கு க்ரஷ் உள்ளதாக ஒத்துக்கொண்டார். 


“அவரிடம் சொல்ல தயக்கம்..”


நேர்காணலில் கலந்து கொண்ட இவரிடம், சமீபத்திய பிடித்த நடிகை அல்லது க்ரஷ் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தனக்கு சாய் பல்லவி மீது க்ரஷ் உள்ளதாகவும் அவர் சிறந்த நடிகர் மற்றும் டான்ஸர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சாய் பல்லவியின் தொலைப்பேசி எண் தன்னிடம் இருந்தும் அவரிடம் பேச தயக்கமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | ‘ராம் சீதா ராம்’ பாடல் வீடியோ : வெளியானது ஆதிபுருஷ் பட பாடல்


இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இது வெறும் ஈர்ப்புதான் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நான் அவரை ரசிப்பது உண்மைதான். அவர் ஒரு சிறந்த நடிகர். ஒரு நாள் எனக்கு அவருடன் நடிக்க ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். அப்படி நடிக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் எனக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பி கிடைக்காது. நல்ல நடிகருடன் ஒரு முறையாவது இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது” என்று சாய் பல்லவியுடன் சேர்ந்து நடிப்பதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 



அதே நேரத்தில் அவர் ஒரு பிரமாதமான நடிகர். என் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். மற்றது பற்றி எனக்கு தெரியவில்லை (மற்றது என்று எதை சொல்கிறார் குல்ஷன் என்று உங்களுக்கும் தோன்றுகிறதா?). இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம். மற்றபடி எதுவும் இல்லை. ஒரு நல்ல நடிகருடன் ஒரு முறையாவது இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது.


இணையத்தை கலக்கிய சாய் பல்லவி…


தென்னிந்திய நடிகையான சாய் பல்லவிக்கு இந்தியா முழுவதும பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இவரைத்தேடி பாலிவுட் பட வாய்ப்புகள் நிறைய வருவதாகவும் சிலர் கூறுகின்றனர். நிவின் பாலி நடிப்பில் உருவாகியிருந்த பிரேமம் படம் வெளியாகி நேற்றுடன் 8 வருடங்கள் ஆனது. அதில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியை எப்படி ரசிகர்கள் கொண்டாடினரோ, அதே போல நேற்றும அவருக்காக எடிட் செய்யப்பட்ட போட்டாேக்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அவரை கொண்டாடினர். அதனுடன், நடிகரின் க்ரஷ் மேட்டரும் சேர்ந்து கொண்டதால் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தார், சாய் பல்லவி. இவர், அடுத்து கமல் ஹாசனின்ட ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.


‘எனக்கு ஆண்களை பிடிக்காது என்றெல்லாம் கிடையாது..’ மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ