‘ராம் சீதா ராம்’ பாடல் வீடியோ : வெளியானது ஆதிபுருஷ் பட பாடல்

Adipurush Second Single: ஆதிபுருஷ் படத்தில் இடம் பெற்றுள்ள ராம் சீதா ராம் என்ற இரண்டாவது பாடல் காதல் காட்சிகளுன் மற்றும் சில முக்கிய காட்சிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 29, 2023, 04:43 PM IST
  • ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16 ம் தேதி வெளியாகும்.
  • இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.
  • அதிர வைக்கும் ஆதிபுருஷ் ரொமான்டிக் பாடல்.
‘ராம் சீதா ராம்’ பாடல் வீடியோ : வெளியானது ஆதிபுருஷ் பட பாடல் title=

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'.‌ இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், ஸன்னி சிங், சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பண்பாட்டுக் காவியமான இராமாயணத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை டி சீரிஸ், ரெட்ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர் பூஷன்குமார், கிரிசன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இராமர் சீதையின் காவியக் கதை
ஆதிபுருஷ் திரைப்படம், இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன் மற்றும் ராவணனாக சைப் அலி கான் நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் லுக்கில் மும்பை சென்ற நடிகர் தனுஷ்..எதற்காக தெரியுமா?

ஆதி புருஷ் இரண்டாவது பாடல்
இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ராம் சீதா ராம் என்ற இரண்டாவது பாடல் காதல் காட்சிகளுன் மற்றும் சில முக்கிய காட்சிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அஜய்-அதுல் இசையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல் தமிழில் ஜி.முரளிதரன் வரிகள் எழுதியுள்ளார். கார்த்திக் இப்பாடலை பாடியுள்ளார். அட்டகாசமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் சரியாக VFX செய்யாமல் வெளியானதால் இப்படத்தை ரசிகர்கள் அதிகளவு விமர்சம் செய்தனர். பின் அந்த பிரச்சனைகளை சரி செய்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. முன்பை விட இந்த டிரைலருக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவினை வழங்கி வந்தனர்.

இதற்கிடையில் தற்போது பான் இந்திய ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார்.  அதையடுத்து Sci Fi திரைப்படமாக பக்கா ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் பைளிங்குவலாக உருவாகி பான் இந்திய திரைப்பட அளவில் உருவாகி வரும் ‘புரோஜக்ட் கே’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யாசகர்களுக்கு ஸ்டார் உணவகத்தில் விருந்து: விஜய் ஆண்டனிக்குக் குவியும் பாராட்டு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News