எனக்கு கொரோனா வந்த நேரத்தில் முத்தக் காட்சியில் நடித்தேன்: அசோக் செல்வன்
எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்று அசோக் செல்வன் தெரிவித்தார்.
எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்று அசோக் செல்வன் தெரிவித்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் மன்மதலீலை. நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளைச் சொல்லும் இப்படம் ஏப்ரல் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா, ''நிச்சயமாக இது ஆபாசமான படமல்ல. இயக்குநர் பாலசந்தர் இருந்து அவர் எடுத்திருந்தால் பாலசந்தரின் மன்மதலீலை என்று சொல்லக்கூடிய தகுதி கொண்ட படம். குழந்தைகளுடன் குடும்பங்களுடன் பார்க்கத் தகுதியுள்ள படம். மாநாடு படத்தை விட அதிகமான ட்விஸ்ட்டுடன் இந்தப் படம் உங்களை ஆச்சரியப்படுத்தும். வெங்கட் பிரபு மிக அட்டகாசமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தக் காலத்தின் ஜெமினி கணேசன் அசோக் செல்வன்தான். இந்தப் படம் மிக ஜாலியான படம். படம் மிக பெரிய வெற்றி பெறும் வாழ்த்துகள்'' என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | நயன்தாராவைக் கைது செய்ய வேண்டும்: காவல் ஆணையரிடம் புகார்
நாயகன் அசோக் செல்வன் பேசும்போது, ''காலேஜ் முடிந்த காலத்தில் நண்பர்களுடன் சென்னை 28 பார்த்தோம். இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது வரம். கொரோனா காலகட்டத்தில் பரிசோதனை முயற்சியாக இதைப் பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் எனக் கேட்டார்கள். இந்தப் படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்குத் தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி'' என்று பேசினார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, ''என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதைதான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்றபோது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்குச் செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன். உடனே செய்யலாம் என்றார். என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர்தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும். உங்களுக்குப் பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி'' என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR