மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.  இந்த சம்பவம் வடிவேலு குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை விரகனூர் அருகே வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) வசித்து வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று இரவு திடீரென உடல் குறைவு காரணமாக காலமானார்.  யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் முடிந்தவுடன் எனது தாய் காலமாகி உள்ளதாக வடிவேல் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!



 இது குறித்து நடிகர் வடிவேலு கூறும் போது,  "எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார்.  அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்களை நல்லபடியாக கொண்டாடிவிட்டு தற்பொழுது மறைந்திருக்கிறார்.  மேலும்,  விக்கிப்பீடியாவில் தவறான தகவல் உள்ளது.   எனவே அதனை அழித்து விடுங்கள்" என்றும் மிகுந்த சோகத்துடன் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.


நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.  "நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.  ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளனர்.  வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி (87) மறைவிற்கு முக அழகிரி நேரில் அஞ்சலி செலுத்தினார்.


மேலும் படிக்க | 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ