கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்றாலும் தினமும் சுமார் 35,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


ALSO READ | தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிவாரண நிதி!


அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தாராளமாக நிதிகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதைத்தொடா்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister Relief fund)  பலா் நிதியளித்து வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (Mk Stalin) தலைமைச்செயலகத்தில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). இச்சந்திப்பின் போது கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு 50 லட்சம் ரூபாய் நடிகர் ரஜினிகாந்த் அளித்தார். முன்னதாக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா 1 கோடி ரூபாய் முதலமைச்சர் ஸ்டாலினிடம் நிதி அளித்த நிலையில், ரஜினிகாந்தும் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்.


முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர். கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை கடைப்பி்டித்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR