நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில்  புகை பிடிக்கும் காட்சிகள் அமைத்தது  தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவன இயக்குனராக  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம், நாளை இருவரும் ஆஜராக உத்தரவிட்டது


மேலும் படிக்க | அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்!


இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி என். சதீஷ்குமார்,  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது சுகாதார துறை துணை இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை  ஆகஸ்ட் 10ம் தேதி தள்ளிவைத்துள்ளார்.


இதற்கிடையே வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர இருப்பதாகவும், தற்போது அவர் கிரேமேன் படப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதால், சென்னை திரும்பிய பிறகு கையெழுத்து பெற்று, மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும், அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்த பிரபலங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR