புதுடெல்லி: இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது (Dadasaheb Palkhe Awards) திரைத்துறையினருக்கு வழங்கப்படுகிறது.  மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞருக்கு வழங்கும் விருது இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதேப்பெயரில் அரசு சார்பில்லா ஒரு தன்னார்வ அமைப்பு தாதா சாகேப் பால்கே விருது (Dadasaheb Palkhe Awards) வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்போது தென்னிந்திய கலைஞர்களுக்கும் விருது வழங்கி மரியாதை செலுத்தவிருக்கிறது. தென்னிந்திய கலைஞர்களுக்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டது. 


பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித்துக்கு (Ajith Kumar) சிறப்பு விருது வழங்கப்படுகிறது. தமிழில் சிறந்த படமாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட் (To Let) திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் (Dhanush) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.



ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகா (Jyothika) சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார். சிறந்த இயக்குனருக்கான விருதை ஒத்தச் செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிசந்தருக்கும் வழங்கப்படுகிறது.


Also Read | #Suriya40 படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் ட்வீட் செய்த முக்கிய அப்டேட்!!


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படத் துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நாகார்ஜுனா, மோகன்லால் (Mohanlal) , சமந்தா என பல திரை நட்சத்திரங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR