தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜகமே தந்திரம் இன்று (ஜூன் 19), நெட்ஃபிக்ஸ்  தளத்தில் மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் தனுஷின் ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் 17 மொழிகளில் இன்று OTT தளத்தில் வெளியாகியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திரைப்படம் ஆரம்பத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடி காரணமாக OTT தளத்தில் ரிலீஸ்  முடிவு செய்தனர். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தை திரையில் பார்க்க முடியவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் ஆவது பார்க்க முடிகிறதே என மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இருப்பினும், வெளியீட்டிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, படம் ஆன்லைனில் கசிந்துள்ளது. எச்டி தரத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்படும் வகையில் சற்று முன்னதாக ஜகமே தந்திராம் ஆன்லைனில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. 


ஜகமே தந்திரம் தமிழ் ராக்கரஸ் தளத்தில் கசிந்துள்ளது திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கவலையை அளித்துள்ளது. ஏனெனில் அது அவர்களின் வருவாயை இது பாதிக்கும். தனுஷ் நடித்த தமிழ்ப் படங்கள், தமிழ் ராக்கர்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட  தளங்களில் கசிவது அடிக்கடி நடக்கிறது. 


ALSO READ | Jagame Thandhiram: ஜகமே தந்திரம் வெளியீடு; Twitter விமர்சனம் இதோ

இருப்பினும், ஒரு படம் வெளியிடுவதற்கு சற்று முன்னதாக கசிந்தது இது முதல் முறை அல்ல. முன்னதாக, தி ஃபேமிலி மேன் 2, சர்தார் கா கிராண்ட் சன், மும்பை சாகா, ஜாதி ரத்னாலு, ஸ்ரீகாரம், தி ப்ரீஸ்ட், ரூஹி, பாம்பே பேகம்ஸ், லாகூர் கானிடென்ஷியல், புது காளை, சுஃபியம் சுஜாதாவும், ஏ.கே. வெர்சஸ் ஏ.கே போன்ற படங்களும் இதற்கு இலக்காகியுள்ளன.


இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒவ்வொரு முறையும் தற்போதுள்ள தளங்கள் மீது தடைவிதித்தாலும், புதிதாக வேறொன்று முளைக்கிறது . பெரிய தியேட்டர் வெளியீடுகளைப் பொறுத்தவரையில், படங்கள் பல திரைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே கசிந்த சம்பவங்கள் நடந்துள்ளன.


ALSO READ | Jagame Thandhiram: ஜகமே தந்திரம் ரிலீஸ்; காமன் டிபி வெளியிட்ட இயக்குனர்