Jagame Thandhiram: ஜகமே தந்திரம் ரிலீஸ்; காமன் டிபி வெளியிட்ட இயக்குனர்

உலகம் முழுக்க தனுஷின் ஜகமே தந்திரம் படம் இன்று வெளியாகிவுள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jun 18, 2021, 12:12 PM IST
Jagame Thandhiram: ஜகமே தந்திரம் ரிலீஸ்; காமன் டிபி வெளியிட்ட இயக்குனர்

Dhanush starrer Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படம் உலகம் முழுக்க இன்று வெளியாகிவுள்ளது. 

தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் நெட்பிளிக்ஸில் OTT  தளத்தில் இன்று 12 மணிக்கு வெளியாக உள்ளது.

ALSO READ | தனுஷ் ரசிகர்கள் உற்சாகம், ஜூன் 18 OTT இல் ஜகமே தந்திரம் ரிலீஸ்!

ஜகமே தந்திரம் கேங்ஸ்டார் படமாக உருவாகியுள்ளது. யூடியூப்-ல் வெளிடப்பட்ட ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெயிலர் இணையத்தை கலக்கியது. மேலும் நேற்று இப்படத்தின் காமன் டிபியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார். 

இதனிடையே நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான The Gray Man எனும் படத்திலும் நடித்து வருகிறார். ஜகமே தந்திரம் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் தி கிரே மேன் படத்தின் இரட்டை இயக்குனர்களான Russo Brothers தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

இப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | மிரட்டும் Jagame Thandhiram டீஸர்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News