நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ஜீவாவின் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் இவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்த பூஜா ஹெக்டே (Pooja Hegde) இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' என்ற பாடல் யூடியூப்பில் பெறும் சாதனைப் படைத்தது. தற்போது விஜய்யுடன் பீஸ்ட் (Beast) படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


ALSO READ | உலகின் வசிகரமான முகம் கொண்ட 100 பெண்கள் பட்டியல்


இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஓப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ் (Dhanush) நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் தான் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR