உலக முழுவதும் ஜூன் 20ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய தந்தையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் (Dhanush) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்களுடன் உள்ள புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். படகில் சென்று கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் அவருடைய இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் கேப்ஷனாக.,


ALSO READ | Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்


தந்தையர் தின (Fathers Day) வாழ்த்துக்கள், குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. எனது உலகத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் நீங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.


 



 


தனுஷ் தற்போது அமெரிக்காவில் ’தி க்ரேமேன்’ என்ற படப்பிடிப்பில் உள்ளார். மேலும் இந்த பட ஷூட்டிங்க்காக அவர் அமெரிக்காவுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Dhanush New Movie: தனுஷ் பட புதிய அப்டேட்; இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR