Dhanush New Movie: தனுஷ் பட புதிய அப்டேட்; இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா தனுஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 18, 2021, 12:12 PM IST
  • டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா தனுஷின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்
  • பெயரிடப்படாத இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்படும்
  • சேகர் தற்போது நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்
Dhanush New Movie: தனுஷ் பட புதிய அப்டேட்; இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

கொரோனாஅச்சுறுத்தலால் இந்தப் படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

ALSO READ | Jagame Thandhiram: ஜகமே தந்திரம் ரிலீஸ்; காமன் டிபி வெளியிட்ட இயக்குனர்

இந்நிலையில் தற்போது தேசிய விருது வென்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்த்தில் உருவாகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் சேகர் கம்முலா தெலுங்கில் டாலர் ட்ரீம்ஸ், ஃபிடா, லீடர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். மேலும் இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.  

பிரம்மாண்ட பொருட்செலவில் நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரேக்கட்டமாக இயக்கவுள்ளார். அதே சமயம் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

தற்போது ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்த பின்னர் சேகர் கம்முலா படத்துக்கான தேதிதளை தனுஷ் ஒதுக்குவார் என்று கூறப்படுகிறது. 

ALSO READ | தனுஷ் ரசிகர்கள் உற்சாகம், ஜூன் 18 OTT இல் ஜகமே தந்திரம் ரிலீஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News