Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்

இப்படத்தின் போஸ்டர்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 20, 2021, 09:53 AM IST
Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்

Dhanush starrer Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படம் உலகம் முழுக்க 17 மொழிகளில் நேற்று முன்தினம் வெளியானது. 

தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியானது.

ALSO READ | Dhanush New Movie: தனுஷ் பட புதிய அப்டேட்; இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த படம் ஈழத்தமிழர் கேங்ஸ்டர் கதை என்பதால் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூயார்க்கில்தான் இந்த டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. அப்படியொரு, புகழ்மிக்க டைம்ஸ் சதுக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

 

 

நியூயார்க்கில் உலகம் முழுக்க புலம்பெயந்தவர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இங்குதான், புகழ்மிக்க ஐ.நா சபையும், நியூயார்க் பங்குச்சந்தையும் அமைந்துள்ளது. உலகின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான டைம்ஸ் சதுக்கத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.

ALSO READ | Jagame Thandhiram: ஜகமே தந்திரம் ரிலீஸ்; காமன் டிபி வெளியிட்ட இயக்குனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News