ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்... வியந்துபோன தனுஷ்
கேப்டன் மில்லர் படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை தனுஷ் வியந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
கோலிவுட்டில் அறிமுகமான தனுஷ் தற்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார். பலரை ரசிகர்களாக சம்பாதித்திருக்கும் தனுஷ் தமிழில் அடுத்தடுத்து கமிட்டாகியிருக்கிறார். அந்தவகையில் அவர் செல்வராகவனின் நானே வருவேன், மித்ரன் ஆர். ஜவஹரின் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவை தவிர செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இதற்கிடையே சாணிக்காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தனுஷும், அருண் மாதேஸ்வரனும் இணையும் படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் படப்படிப்பு ஆரம்பித்து ஜனவரி இறுதிவரை நடக்குமென்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேப்டன் மில்லர் என்ற பெயரில் போராளி ஒருவர் இருந்ததால் இப்படத்தில் போராளி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு தொடர்பான வீடியோ கடந்த ஜூலை 2ஆம் தேதி வெளியாகி வைரலானது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷின் ரசிகர்கள் உருவாகிய போஸ்டர் ஒன்று இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது.
அந்த போஸ்டரை தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,‘வாவ்’ என குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கடைசி விவசாயிதான் எஞ்சாயி எஞ்சாமிக்கு முக்கிய காரணம் - விளக்கம் கொடுத்த தீ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ