ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்! தி கிரே மேன் விமர்சனம்!
ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான தி கிரே மேன் திரைப்படம் தற்போது நெட்பிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.
அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அந்தோனி ருஸ்ஸோ ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் தி கிரே மேன் படம் தற்போது நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் மற்றும் தனுஷ் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானதிலிருந்து தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட்டின் முக்கியமான படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்ட அந்த புகைப்படங்களும் வைரலானது. மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரிவியூ ஷோவில் தனுஷ் வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | அழகிலும், நடிப்பிலும் அசத்திய சாய்பல்லவி - கார்கி திரைவிமர்சனம்!
உளவு நிறுவனமான சிஐஏ பெரிய குற்றங்களை செய்து சிறையில் இருக்கும் நபர்களை வெளியே எடுத்து அவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுத்து தங்களது வேலைக்காக பயன்படுத்துகிறது. ஏஜென்ட் சிக்ஸ் என்று அழைக்கப்படும் ரியான் கோஸ்லிங்கையும் அவ்வாறு வெளியே எடுத்து ஒருவரை கொலை செய்ய சொல்கிறது. ரியான் கோஸ்லிங் கொலை செய்யும் நபர் முன்னாள் ஏஜென்ட் என்பதும் சிஐஏ சம்பந்தமாக முக்கிய ரகசிய தகவல்களை அவர் வைத்துள்ளார் என்பதும் அவருக்கு தெரிய வருகிறது. ஹீரோ ரியான் கோஸ்லிங்க்கும் உண்மை தெரிந்து விட்டது என்று என்னும் சிஐஏ முக்கிய அதிகாரி அவரைக் கொல்ல திட்டமிட்டு அந்த வேலையை கொடூர வில்லன் கிறிஸ் எவன்ஸிடம் ஒப்படைக்கிறார். ரகசிய தகவல் வெளியில் வந்ததா? ரியான் கோஸ்லிங்க்கு என்ன ஆனது? என்பது தான் தி கிரே மேன் படத்தின் கதை.
வழக்கமான ஹாலிவுட் படங்கள் போல இந்ததி கிரே மேன் படத்திலும் சண்டை காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உள்ளது. சொல்லப்போனால் சண்டை காட்சிகளில் தான் படமே நகர்கிறது. ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் இருவருக்குமே சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இருவருமே கச்சிதமாக பயன்படுத்தி உள்ளனர். படம் ஆரம்பித்து முடியும் வரை எங்கயுமே தொய்வில்லாமல் அடுத்தடுத்து நகர்ந்து செல்வது படத்தில் உள்ள சிறிய குறைகளை கூட கவனிக்க விடாமல் செய்கிறது. ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டு வெளியேற வழியே இல்லாத நிலையில் தன் கையில் உள்ள பொருட்களை வைத்து ரியான் கோஸ்லிங் தப்பிக்கும் காட்சி படும் பிரமாதமாக உள்ளது. அவரது பிட்னஸ் அவர் எது செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு உள்ளது.
தி கிரே மேன் படம் பல நாடுகளில் நடப்பது போல் காட்டப்படுகிறது, இருப்பிடம் வெறும் பெயர்களில் மட்டுமே அவை உள்ளதால் படத்திற்கு எந்த அளவிலும் வலு சேர்க்கவில்லை. வில்லனாக அறிமுகமாகும் தனுஷ் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார், ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக இவரது சண்டை காட்சிகளும் மாஸாக அமைந்துள்ளது. வில்லனாக அறிமுகமாகி பின்பு திருந்துவது போல் தனுஷின் கதாபாத்திரம் இருந்தாலும் இந்த படத்தில் தனுஷ் எதற்கு என்ற கேள்வியே படம் பார்த்து முடித்தவுடன் எழுகிறது. இந்த படத்தில் ஒரு தமிழனாகவே தனுஷ் நடித்துள்ளார். மாஸாக அறிமுகமானாலும் இறுதியில் அவர் என்ன ஆனார் என்பதை படத்தில் காட்டவில்லை. தனுசுக்காக இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு தி கிரே மேன் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கலாம். கேமரா, இசை அனைத்தும் படத்திற்கு பக்கபலமாக உள்ளது. கிட்டத்தட்ட 1500 கோடி செலவில் உருவானதாக சொல்லப்படும் தி கிரே மேன் ஆக்சன் பட ரசிகர்களை மிரள வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் படிக்க | புதுவிதமான கிரைம் திரில்லர்! தேஜாவு திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ