பீஸ்ட் பட டிரைலர்ல இதையெல்லாம் கவனீச்சீங்களா? ’இலுமினாட்டி விஜய்’
நேற்று வெளியான பீஸ்ட் பட டிரைலரில் இலுமினாட்டி தொடர்பான பல குறியீடுகள் இருப்பதாக ட்விட்டரில் காமெடி போஸ்ட்கள் பரவி கிடக்கின்றன.
பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் பலகட்ட கோரிக்கைகளுக்கு பின் நேற்று வெளியாகியிருக்கிறது. இந்த டிரைலரில் இலுமினாட்டி தொடர்பான பல குறியீடுகள் இருப்பதாக ட்விட்டரில் காமெடி கலந்த போஸ்ட்கள் ட்ரெண்டாகி வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் என்ன என பார்க்கலாம்.
மேலும் படிக்க | பீஸ்ட் டிரெய்லரை பார்த்த கேஜிஎப் இயக்குனரின் ரியாக்சன்!
செங்கோல் டிவி என்ற யூடியூப் சேனலை நடத்திவரும் தமிழ் தேசியவாதி பாரிசாலன் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலை சரமாரியாக விமர்சித்திருந்தார். அவர் எப்போது சர்ச்சையில் சிக்கக்கூடியவர்தான் என்றாலும் இந்த அரபிக் குத்து தொடர்பான வீடியோ செம வைரல் ஆனது. அந்த விடியோவில் அவர் அரபிக் குத்து பாடலை அங்குலம் அங்குலமாக அலசியிருந்தார்.
அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதவே இல்லை என்று ஆரம்பித்தவர் சமணர்களை கழுவில் ஏற்றிய காட்சியைதான் இந்தப் பாடலில் குறியீடாக வைத்திருக்கிறார்கள் என்பது வரை விமர்சித்தார். முக்கோன குறியீடு, கண்கள் குறியீடு ஆகியவை இலுமினாட்டிகளின் குறியீடு என்று பேசி திரையுலகில் அந்த 13 குடும்பங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று முடித்தார் பாரிசாலன்.
தற்போது பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் இதேபோல முக்கோணம், கண்கள், கோடாரி என அனைத்தையும் தனித்தனியாக படம் எடுத்து பாரிசாலன் இதையெல்லாம் என்ன செய்யப் போகிறாரோ என ரசிகர்கள் டிவிட்டரில் அலம்பல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். பாரிசாலனின் வீடியோக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | மும்பையில் வீடு வாங்கும் சமந்தா! விலை இதனை கோடியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR